Header Ads



ரணிலுக்கு மகிந்த ஆலோசனை

நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சாவகச்சேரியில் அண்மையில் மீட்கப்பட்ட க்ளைமோ குண்டுகள், தற்கொலை அங்கி மற்றும் ஏனைய வெடிபொருட்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி, பிரதமரிடம் கலந்துரையாடியுள்ளார்.

வெடிபொருட்கள் மீட்கப்பட்ட விடயம் குறித்து தொலைபேசி ஊடாக மஹிந்த, தகவல்களை கேட்டறிந்து கொண்டுள்ளார்.

பயங்கரவாதம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை எந்தவகையிலும் அனுமதிக்க முடியாது என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்களினால் மக்கள் பீதியடைக் கூடும் எனவும் பாதுகாப்புத் தரப்பினரை ஆயத்த நிலையில் வைத்திருக்குமாறும் அவர், ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த விடயம் குறித்து தாம் அவதானிப்புடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் குறித்து விசேட விசாரணை நடாத்த பாதுகாப்பு தரப்பிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் பதிலளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.