"போதைப் பொருள் வர்த்தகத்தில், முஸ்லிம்கள் மாத்திரம் ஈடுபடவில்லை" BBS
இலங்கையின் தென் கடற்பரப்பில் கப்பலொன்றலிருந்து கைப்பற்றப்பட்ட 110 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் அமைச் சர்களும் சம்பந்தப்பட்டுள்ளார்கள்.அவர்களை இனங் காணுவதற்கான உத்தரவினை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி வழங்க வேண்டுமென பொது பலசேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலன்த விதானகே விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அறிக்கையில் மேலும்தெரிவித்துள்ளதாவது;
‘இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் முஸ்லிம்கள் மாத்திரமல்ல சிங்கள மற்றும் தமிழர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். சில அமைச்சர்களின் உதவியுடன் போதைப் பொருள் இலங்கைக்கு கடத்தப்படுகிறது. கடந்த கால அரசாங்கத்திலும் இவ் வர்த்தகத்தின் பின்னணியில் அமைச்சர்கள் செயற்பட்டார்கள்.
பொதுபலசேனா அமைப்பு 2013 ஆம் ஆண்டு கொலன்னாவையில் நடத்திய சங்க சம்மேளனத்தின்போது இலங்கைக்கு கடத்தப்படும் போதைப்பொருட்கள் தொடர்பாக விபரங்களை வெளியிட்டது.
அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் வேண்டியது ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.
நீர்கொழும்பு பகுதியில் முஸ்லிம் கொலனி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வெளிநாட்டவர்கள் குடும்பமாக வாழ்கிறார்கள். பாகிஸ்தானியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள், ஈரானியர்கள் வீடுகளை வாடகைக்கு அமர்த்தி வாழ்கிறார்கள்.
இவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் எங்கிருந்து இவர்களுக்கு பணம்கிடைக்கிறது என்று தேடிப்பார்க்கும்படி நாம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தோம். ஆனால் எமது கோரிக்கைகள் கவனத்திற் கொள்ளப்படவில்லை.
எமது எதிர்வு கூறல்கள் இன்று நிரூபணமாகியுள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான ஹேரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இது அழிக்கப்பட வேண்டும். கடந்தகாலத்தில் இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மீண்டும் சில அதிகாரிகளால் சந்தைக்கு விடப்பட்டது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
வெளிநாட்டு முஸ்லிம்களின் ஆதிக்கம் இன்று கிழக்கிலும் மன்னார், புத்தளம் போன்ற பகுதிகளிலும் அதிகரித்துள்ளது.
அரசாங்கம் இலங்கையின் பல பாகங்களிலும் வாழும் வெளிநாட்டு முஸ்லிம்கள் தொடர்பாக உளவுப்பிரிவு மூலம் தேடுதல்களை முன்னெடுக்க வேண்டும்.
போதைப் பொருள் பாவனையிலும் போதைப் பொருள் நாட்டுக்குள் பரந்தளவில் விநியோகிக்கப்படுவதிலும் கடுமையான சட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் உள்நாட்டில் விளையும் கஞ்சா மருந்துக்கான பாவனைக்கு அரசாங்கம் பர்மிட் வழங்குவதற்கு முன்வர வேண்டும். இதனை எமது அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை தனமல்வில காட்டுப்பகுதியில் ஆயிரக்கணக்கான எக்கரில் கஞ்சா பயிர்ச்செய்கை நடைபெறுகின்றதே அதைப்போய் முதலில் தடைசெய்யும்
ReplyDeleteWhen BBS talks the truth , it must be appreciated and
ReplyDeletethis time on drug issue , it has talked the truth. Yes,
all three communities are engaged in drug use and drug
business . And also , foreign Muslims seeking asylum
here , must be monitored for their activities .
Recently some Pakistani girls were arrested for
engaging in prostitution and we don't know whether
they were Muslims or non Muslims . And Srilankan
Muslims should know that Pakistan has Hindu and
Christian communities .