Header Ads



பங்களாதேஷ் நாட்டு வங்கியில், கொள்ளையடித்த 8 இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டனர்


பங்களாதேஷ் நாட்டின் மத்திய வங்கியில் கொள்ளையிட்டதாக கூறப்படும் எட்டு இலங்கையர்கள் உட்பட 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அந்தநாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

குறித்த வங்கியின் கணனி கட்டமைப்பில் இரகசியமாக ஊடுருவி பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பணத்தை பிறிதொரு வங்கிக் கணக்குக்கு மாற்றிய சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் 5ம் திகதி நடைபெற்றது. 

குறித்த பணம் பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையிலுள்ள சில கணக்குகளுக்கே இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட, விசாரணைகளின் படி இந்த சம்பவம் தொடர்பில் 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் பொலிஸார் நேற்று குறிப்பிட்டுள்ளனர். 

இவர்களில் 12 பேர் பிலிப்பையின்ஸ் நாட்டினர் எனவும் எட்டுப் பேர் இலங்கையர் எனவும் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

எது எவ்வாறு இருப்பினும் சந்தேகநபர்கள் இந்தக் குற்றத்தை எவ்வாறு இழைத்தனர் என்பது குறித்து தகவல் வௌியிடப்படவில்லை. 

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கைக்கு அனுப்பட்டுள்ளதாக, பங்களாதேஷ் பாதுகாப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த கொள்ளை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

1 comment:

  1. போனாலும் புத்திய காட்டி நாட்டின் மானத்தை கப்பலில் ஏற்றாமல் விடமாட்டார்கள் (நாய்க்கு நடுக்கடலுக்கு போனாலும் நக்கு தண்ணி நக்கு தண்ணிதான் )பழமொழி

    ReplyDelete

Powered by Blogger.