Header Ads



வெள்ளவத்தையில் கைதான 8 இந்தியர்களில், அறுவரின் சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளது

அண்மையில் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜைகள் எட்டு பேரில் அறுவருக்கு ஒரு பக்க சிறுநீரகம் மாத்திரமே இருப்பதாக தெரியவந்துள்ளது. 

அவர்களுடைய ஒருபக்க சிறுநீரகம் அகற்றப்பட்டிருப்பது வைத்திய பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்தர் . 

கடந்த மார்ச் 04ம் திகதி வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து எட்டு இந்திய பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

அவர்கள் எட்டு பேரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதுடன், எதிர்வரும் 04ம் திகதி அவர்களை மீணடும் நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.