65,000 வீடுகளை அமைக்கும் திட்டம், தற்காலிகமாக இடைநிறுத்தம்
-gtn-
65000 வீடுகளை அமைக்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தை அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது:-
வடமாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு 65000 வீடுகளை அமைக்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தை அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான விசேட குழுவொன்று இந்த திட்டம் குறித்து ஆராயவுள்ளதாக அரசியல்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
குறிப்பிட்ட திட்டத்திற்கு வடமாகாண முதலமைச்சர் உட்பட பலர் தமது எதிர்ப்பை வெளியிட்டுவந்த நிலையிலேயே இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த வீடமைப்புதிட்டத்தை முன்னெடுப்பதற்கு உள்நாட்டு நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. பிரபல வர்த்தகர் ஜெகான் அமரதுங்கவின் நிறுவனமும், அமைச்சர் தயாகமகேயின் நிறுவனமும் இந்த முயற்சிகளில் இறங்கியிருந்தன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நெருக்கமான அமைச்சர் ஒருவர் குறிப்பிட்ட வீடமைப்பு திட்டத்தை ஜெகான் அமரதுங்கவின் நிறுவனத்திற்கு வழங்கவேண்டும் என அழுத்தம் கொடுத்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதேவேளை உள்நாட்டு கட்டுமான நிறுவனங்களின் ஆதரவுடன் செயற்படும் அரசியல்வாதி ஒருவரின் அழுத்தம் காரணமாகவே இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அரசவட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
Post a Comment