ரஞ்சன் ராமநாயக்க 50 கோடி ரூபா தர வேண்டும்
சமூக சேவைகள் மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக 50 கோடி ரூபா கோரும் மானநஷ்ட வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சுதந்திரக் கட்சி அணியின் முக்கியஸ்தரும், தென் மாகாண சபையின் அமைச்சருமான டீ.வி. உபுல் என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
மாகாண அமைச்சர் டீ.வி. உபுல் என்பவரும் அவரது மகனும் இணைந்து ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருக்கும் விகாரையொன்றின் காணி ஆவணங்களை அடகுவைத்து கடன் பெற்றுக் கொண்டுள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக அவர் சில குரல் ஒலிப்பதிவுகளையும் வெளியிட்டிருந்தார்.
எனினும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மாகாண அமைச்சர் டீ.வி. உபுல், அதன் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து ஐம்பது கோடி இழப்பீடு கோரி பிரதியமைச்சருக்கு எதிராக மானநஷ்ட வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

Post a Comment