துருக்கியில் 5 கோடி மக்களின், தனிப்பட்ட தகவல்கள் கசிந்தது
துருக்கியில் சுமார் ஐந்து கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளைத் துவக்கியுள்ளனர்.
இவ்வாறு மிகப் பெரியளவில் கசியவிடப்பட்ட தனிநபர் தகவல்களில் துருக்கிய அதிபர் ரசிப் தாயிப் ஏர்துவான் தொடர்பான தகவலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இணையத் தாக்குதல்காரர்களால் வெளியான நூற்றுக்கணக்காணவர்களின் தகவல்கள், தேர்தல் பதிவுகளிலுள்ள வாக்காளர்களின் பெயர்களுக்கு ஒப்பானவை என துருக்கிய நீதி அமைச்சர் பெகிர் பொஸ்தாக் கூறியுள்ளார்.
இதேபோன்றதொரு தகவல் கசிவின் காரணமாகவே, 2010ஆம் ஆண்டு துருக்கியில் தரவு பாதுகாப்பு சட்ட வரைவை ஏற்படுத்த தூண்டியது என அவர் தெரிவித்தார்.
இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வரும் எனவும் நீதி அமைச்சர் பெகிர் பொஸ்தாக் கூறியுள்ளார்.
Post a Comment