5 பிள்ளைகளின் பெற்றோர் 6 ஆவது குழந்தையை குழிதோண்டி புதைத்தனர் - நீர்கொழும்பில் சம்பவம் (படங்கள்)
(எம்.இஸட்.ஷாஜஹான்)
பிரசவித்த ஒரு நாள் வயதுடைய சிசுவை தனது வீட்டுத் தோட்டத்தில் குழிதோண்டி புதைத்த பெண் மற்றும் அவரது கணவன் ஆகியோரை இன்று (7) கைது செய்துள்ளதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.எத்கால, வெலிஹேன, கொச்சிக்கடைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜோசப் ஜோன் (33 வயது), யுவன் கிறிசாந்தி (32 வயது) ஆகியோரே கைது செய்யப்பட்ட தம்பதியினராவார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கைது செய்யப்பட்ட தம்பதியினருக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். ஆறாவது குழந்தையை பெறுவதற்காக பெண் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் குழந்தையை ஈன்று சந்தேக நபர்களது வீட்டுத் தோட்டத்தில் சிசுவைப் புதைத்துள்ளதாக அந்தப் பகுதி கிராம சேவகருக்கு ஒருவர் தகவல் வழங்கியுள்ளார். இதனை அடுத்து கொச்சிக்கடை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து சந்தேக நபர்களின் வீட்டுக்கு முன்பாக உள்ள கஜு மரத்தின் கீழ் குழி தோண்டப்பட்டு பிறந்து ஒரு நாள்; வயதுடைய அந்த சிசு புதைக்கப்பட்டுள்ளமையும் , அந்த சிசுவை கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி வீட்டில் வைத்து சந்தேக நபரான பெண் பிரசவித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் மிகவும் வறிய நிலையில் வாழ்பவர்கள் எனவும், கணவன் கூலி வேலை செயது வரும வருவாயின் பெரும் பகுதியை மதுபானம அருந்த செலவிடுபவர் எனவும் பொலிஸ் விசாரணைகளின் போது மேலும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இன்று முற்பகல் (7) நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் ருச்சிர வெலிவத்த , நீர்கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி வழிசேட வைத்திய நிபுணர் ரூஹுல் ஹக் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. அத்துடன் சந்தேக நபரான பெண் குழந்தையை பெறும் போது அணிந்திருந்த இரத்தம் தேய்ந்த ஆடையும் எரிக்கப்பட்ட நிலையில் அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் சந்தேக நபர்களான தம்பதியிளரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களை மன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சிசுவின் பிரேத பரிசோதனை நீர்கொழும்பு வைத்தியசாலையில மேற்கொள்ளப்படவுள்ளது.
What a Jahiliyyah?
ReplyDelete