Header Ads



இலங்கையில் திடீரென செல்வந்தர்களான 3000 பேர்

நாட்டில்  திடீரென 3000 பேர் செல்வந்தர்களாகியுள்ளனர் என லஞ்ச ஊழல் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

இத்தொகையில் அரசியல்வாதிகளும் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

ஊழல் மோசடி   ஆணைக்குழுவின் தகவல்கள் பிரகாரம் அரச உயரதிகாரிகள் 250 பேரும் உள்ளடங்கியுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளில் பெரும்பான்மையானவை கல்வி, பொலிஸ், மோட்டார் வாகனப் போக்குவரத்து உட்பட பல்வேறு பிரிவுகள் தொடர்பாகவே முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அரசியல்வாதிகள் உட்பட அரசின் உயர் அதிகாரிகள் 5 பேருக்கு எதிராக தற்போது லஞ்ச ஊழல்  ஆணைக்குழு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும்  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.