Header Ads



ஏப்ரல் 30 இல் முஸ்லிம் மீடியா போரத்தின் 20ஆவது ஆண்டு விழா - ரணில் பிர­தம அதிதி

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 20ஆவது ஆண்டு பூர்த்தி விழா எதிர்­வரும் ஏப்ரல் 30ஆம் திகதி சனிக்­கி­ழமை காலை 9.30 மணிக்கு கொழும்பு – 07 இலுள்ள விளை­யாட்டு துறை அமைச்சின் கேட்­போர்­கூ­டத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள இந்த நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க கலந்­து­கொள்­ள­வுள்ளார்.

இதன்­போது, அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் பிரதித் தலை­வரும், பேரு­வளை ஜாமியா நளீ­மியா கலா­பீ­டத்தின் பிரதிப் பணிப்­பா­ள­ரு­மான அஷ்ஷெய்க் ஏ.சீ.அகார் முஹம்மத் மற்றும் இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னத்தின் முன்னாள் பணிப்­பாளர் நாயகம் கலா­நிதி ரங்க கலன்­சூ­ரிய ஆகியோர் சிறப்­பு­ரை­யாற்­ற­வுள்­ளனர்.

மூத்த ஆய்­வாளர் எம்.ஐ.எம்.முஹைதீன், கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிங்­களம் மற்றும் ஊடகத் துறையின் முன்னாள் தலை­வ­ரான பேரா­சி­ரியர் ஜே.பி திசா­நா­யக்க, மூத்த ஊட­க­வி­ய­லா­ளரும், தினக்­குரல் பத்­தி­ரி­கையின் முன்னாள் பிர­தம ஆசி­ரி­ய­ரு­மான பி.தன­பா­ல­சிங்கம் மற்றும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் ஆகியோர் இந்த நிகழ்வில் விருது வழங்கி கௌர­விக்­கப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதற்கு மேல­தி­க­மாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 20ஆவது ஆண்­டினை முன்­னிட்டு நடத்­தப்­பட்ட போட்­டி­களில் வெற்றி பெற்­ற­வர்­க­ளுக்­கான பரி­சில்கள் இந்த நிகழ்வில் வழங்­கப்­ப­ட­வுள்­ள­துடன், மீடியா போரத்தினால் ஐந்தாவது தடவையாக வெளியிடப்படும் மீடியா டிரெக்ரியும் வெளியிடப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.