Header Ads



மஹிந்தவுக்கு சட்டத்திற்கு முரணாக 256 பேர் பாதுகாப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, இது வரை காலமும் சட்டத்திற்கு முரணான வகையில், இராணுவத்தைச் சேர்ந்த 103 பேர் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

 ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்புக்கு, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) உள்ளிட்ட 103 பொலிஸாரும் இராணுவத்தைச் சேர்ந்த 103 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவசரகால நிலை பிரகடனப்படுத்தாத நிலைமையில், இராணுவத்தினரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்துவதற்கு சட்டத்தில் எவ்வித இடமுமில்லை என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு 103 இராணுவத்தினரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவுக்கு 50 இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு மேலும் 50 பொலிஸார் வழங்கப்பட்டுள்ளனர்.

எனவே அவர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டிருப்பது என்பதில் எவ்வித உண்மையும் இல்லை என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

அவ்வாறாயின், இது வரை காலமும் சட்டத்திற்கு புறம்பான வகையிலா இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் ? என அவரிடம் வினவப்பட்டபோது, அவர் "ஆம்" என பதிலளித்தார்.

அத்துடன், இவ்விடயம் தொடர்பில் படிப்படியாக இராணுவத்தினரை நீக்கி, அதற்கு பதிலாக விசேட அதிரடிப்படையினரையும் பொலிஸாரையம் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவித்த அவர், பாதுகாப்பை குறைக்கப் போவதில்லை எனவும் போதிய பாதுகாப்பை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

1 comment:

  1. If our forces are quality and powerful trained, why do this big numbers forces appointed to protect the Mahinda and Gotha?

    ReplyDelete

Powered by Blogger.