21 முஸ்லிம் எம்.பி.க்களும், ஓரணியில் திரளுகின்றனர்
புதிய அரசியலமைப்பில் உள்ளடங்கப்பட வேண்டிய முஸ்லிம் சமுதாயத்தின் பரிந்துரைகளை வடிவமைப்பதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியின் தலைமையில் ஒன்றிணைந்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றுகூடி புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டிய முஸ்லிம் சமூகத்துக்கான பரிந்துரைகள், ஆலோசனைகள் பற்றி தீர்மானிக்கவுள்ளனர்.
இதற்கென எதிர்வரும் 20 ஆம் திகதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் பௌஸியின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஒன்றுகூடி முஸ்லிம் சமூகம் தொடர்பான பரிந்துரைகளை ஆராயவுள்ளனர்.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி ‘விடிவெள்ளி’ க்கு கருத்துத் தெரிவிக்கையில்
‘புதிய அரசியலமைப்பில் முஸ்லிம் சமூகம் தொடர்பாக உள்வாங்கப்பட வேண்டிய விடயங்களை முஸ்லிம் புத்திஜீவிகள் சிவில் சமூக அமைப்புகள், நலன்புரி அமைப்புகள் என பல்வேறு அமைப்புகள் புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவிடம் முன்வைத்துள்ளன.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி மற்றும் கொள்கை வேறுபாடுகளின்றி ஒன்றிணைந்து சமூகம் சார்பான பரிந்துரைகளை முன்வைக்கத் தீர்மானித்துள்ளோம். புதிய அரசியல் அமைப்பில் சமூகம் சார்ந்த பல விடயங்கள் உள்வாங்கப்பட வேண்டியுள்ளன.
முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக கடந்த காலம் முதல் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு அரசியலமைப்பின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். சமூகத்தின் உரிமைகள் பாதுகாப்பு, கல்வி, கலாசாரம், பொருளாதாரம் என்பனவற்றுக்கு உத்தரவாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
எமது முஸ்லிம் தனியாள் சட்டத்தின் திருத்தங்களும் உள்வாங்கப்பட வேண்டியுள்ளன. இவற்றை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான நாம் ஒன்றுகூடி கலந்துரையாடி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் இவ்விவகாரத்தில் மிகவும் ஆர்வமுடன் இருக்கிறார்கள். இது எமது சமுதாயத்தின் விடிவுக்கு சிறந்ததோர் வாய்ப்பாக அமையும் என்றார்.
அல்ஹம்து லில்லாஹ்
ReplyDeleteபாராட்ட கூடிய விடயம் இதுபோல் எல்லோரும் இணைந்து ஒரே கட்சியாக செயல்பட்டால் நமது முஸ்லிம் சமூகம் !!!!!!! விடமாட்டங்கள் எப்படியாவது முடியுமான மட்டும் இடியாப்ப சிக்கல் உண்டாக்கி முடியுமான மட்டும் பிரித்து விடுவார்கள் ஹ்ம்ம்
ReplyDeleteஒரு காலத்திலும் ஒன்ரு சேர்ந்து தீர்மானிக்க மாட்டானுகள்!
ReplyDeleteஇதெல்லாம் சும்மா..... பொய்.
ReplyDeleteInsha allah they will do.make dua. Dont criticise at all.good sign.one by one will do.
ReplyDeleteசிறுவயதில் படித்த புலி வருகிறது கதைதான் ஞாபகம் வருகிறது. உண்மையில் இவர்கள் ஒன்று சேர்ந்தாலும் யாரும் கண்டுகொள்ளாத நாள் வெகு தொலைவில்லை
ReplyDeleteகடந்த பொதுத்தேர்தலில் இந்நாட்டு முஸ்லிம்கள் தமக்கு விடிவு தேடித்தர சுயநல முஸ்லிம் அரசியல்வாதிகளால் முடியாது, முடிந்தாலும் செய்யமாட்டார்கள். தங்கள் இருப்பைக் காத்துக் கொள்ள எந்த கேவலமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமோ அத்தனையிலும் ஈடுபட்டார்கள் என்பதை நன்கு எடை போட்டனர்.
ReplyDeleteஅதன் பயனே அம்மக்கள், முஸ்லிம் அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் முற்றாகப் புறக் கணித்துவிட்டு, சுயமாக ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை மிகவும் நிதானமாக எடுத்திருந்தமை.
இதனால் தமக்கு ஏற்படவிருந்த பாதிப்பினை நன்கு அறிந்ததனாலேயே முஸ்லிம் அரசியல்வாதிகள், மைத்திரிக்கு ஆதரவு தர முன்வந்தனர். அப்போதுகூட அச்சந்தர்ப்பத்தைத் தமக்குப் பயன்படுத்திக் கொண்டனர்.
இவர்கள் அக்காலங்களில் செய்தவைகளை மக்கள் இன்னும் மறந்துவிட வில்லை. முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பமும் அவர்கள் தங்களுக்கு இலாபம் சம்பாதிக்கும் தருணங்களாக மாற்றப்பட்டன.
சிலர் முஸ்லிம்களுக்கு எவ்வித அநியாயங்களும் நடக்கவில்லை. ஊடகங்கள் பொய் சொல்வதாகப் பகிரங்கமாகவே அறிக்கை விட்டனர்.
அழுத்கம உட்பட நடந்த அநியாயங்களுக்கு முஸ்லிம்ளே காரணஸதர்கள் என கடந்த அரசால் பாராளுமன்றில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, அதை எதிர்த்தால் தமது அமைச்சுப் பதவிகளும், வருவாய்களும் முடங்கி விடும். மேலும் தமது கடந்த கால நடவடிக்கைகளுக்கு எதிராக விசாரணைகள் முடுக்கிவிடப்படும் என்ற அச்சத்தால், அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் போது பாராளுமன்றைப் பகிஸ்கரிப்பதாக கதையளந்து, அத்தீர்மானம் எவ்வித எதிர்ப்புமின்றி நிறைவேற ஒத்துழைப்புக் கொடுத்தனர்.
இவர்கள் தற்போது ஒன்று கூடிஇருப்பது, முஸ்லிம்களின் நலனைக் காக்கவல்ல, அரசு செய்யவுள்ள ஏதோவோர், காரியத்தை எவ்வித எதிர்ப்பும் இன்றி, அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் ஏகாபித்த முடிவுடன்தான் நாம் நிறைவேற்றினோம் என்று கூறுவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் தமது இருப்பு மற்றும் நன்மைகளை பெற்றுக் கொள்ளவும் தமக்கு வரவுள்ள துன்பங்களில் இருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும் என்பதை யூகிக்கலாம்.