20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் - ஆத்திரப்படும் முன்னாள் பிரபல வீரர்கள்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல கேப்டன் ஸ்டீவ்வாக் ஜெர்மனியில் நடந்த விளையாட்டு நிகழ்ச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:–
உலகம் முழுவதும் 20 ஓவர் கிரிக்கெட் ‘லீக்’ போட்டிகள் பணத்துக்காகவே விசுவாசமாக உள்ளன. அணிகள் மீது விசுவாசமாக இருப்பது இல்லை.
பணத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதற்கு மட்டுமே நேர்மையாக இருப்பதால் 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) ஒரு சமச்சீரான அணியை கண்டுபிடிக்க முடியாத நிலை இருக்கிறது.
ஆனால் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 3 நாடுகளும் ஓரளவு 3 வடிவத்துக்கும் அணிகளில் சமநிலையை பராமரிக்க முடிந்துள்ளது.
20 ஒவர் போட்டியில் பணம் மழை குவிவதால் வீரர்களும் அதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நாட்டுக்காக ஆடும் கடமை குறித்த விசுவாசம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. பணத்தின் மீதே அதிகமாக விசுவாசம் இருக்கிறது.
மெக்குல்லம் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அவரால் இன்னும் 4 அல்லது 5 ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட இயலும்.
தற்போது அவர் தனது குடும்பத்துக்காக 20 ஓவர் ‘லீக்’ போட்டிகளில் ஆடி வருகிறார். இது சரி தான். ஆனால் ஒட்டு மொத்தமாக பார்த்தால் பணத்துக்கு மட்டுமே விசுவாசம் அதிகரித்து உள்ளது. தனது நாட்டு அணிக்கான விசுவாசம் இல்லை.
நான் வீரர்களை குறை சொல்லவில்லை. ஆனால் இது ரசிகர்களுக்கு தான் கடினமானது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் போட்டிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. ஆஸ்திரேலியா டெஸ்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் இயன் போத்தம் கூறும்போது, 20 ஓவர் போட்டிக்கு இந்தியா தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார்.
Post a Comment