இலங்கை நெடுஞ்சாலைகள் சாதனை - ஒரேநாளில் 17.6 கோடி லாபத்தை சுருட்டின
அதிவேக நெடுஞ்சாலைகளின் ஒருநாள் வருமானம் 17.6 கோடி ரூபா என அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு பணிப்பாளர் எஸ். ஒபநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
புத்தாண்டு காலத்தில் பதிவான அதி கூடிய வருமானம் நேற்றைய -16- தினம் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் 55702 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியுள்ளன.
இதன் மூலமாக அதிவேக நெடுஞ்சாலைகளின் ஒருநாள் வருமானம் 17.6 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment