Header Ads



முஸ்லிம் அகதிகள் 12 பேரை, தன்னுடன் இத்தாலிக்கு அழைத்துச்சென்ற பாப்பரசர்

கிரேக்கத் தீவிலுள்ள குடியேறிகள் முகாமுக்கு சென்றிருந்த போப் பிரான்ஸிஸ், அங்கிருந்த சிரியன் முஸ்லிம் அகதிகள் 12 பேரை தன்னுடன் இத்தாலிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

குடியேறிகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கிக்கு இடையில் ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னதாகவே, இவர்கள் முகாம்களில் வைக்கப்பட்டிருந்தனர் என வாட்டிகன் தெரிவித்துள்ளது.

குடியேறிகளை வரவேற்பதற்கான நல்லெண்ணத்தை உருவாக்குவதற்காக, போப் பிரான்ஸிஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என அவரது அலுவலகம் கூறுகிறது.

முன்னதாக, லெஸ்போஸ் தீவிலுள்ள குடியேறிகளுடன் பேசிய போப் பிரான்ஸிஸ், "நீங்கள் எவரும் தனித்துவிடப்படவில்லை" என அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.


3 comments:

  1. மத்திய கிலக்கு முஸ்லிம் நாடுகள் வெட்கி தலைகுனிய வேண்டிய விடயம். இஸ்ரேல் கட்டுபாட்டில் இருக்கும் முஸ்லிம் நாட்டு மன்னர்கலும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் மற்றவர்கலும் ஓடி ஒலிக்க வேண்டும்.

    ReplyDelete
  2. A Women kiss an Anjabi. Conceding E-maan for immigration. Don't use the word "Muslim" Here

    ReplyDelete
  3. வேறு ஏதாவது சூட்சிகள் இருக்கலாம்

    ReplyDelete

Powered by Blogger.