Header Ads



சுதந்திரக் கட்சியிலிருந்து 10 பேர் நீக்கம், ஜெனீவா சென்றமை வெட்கப்பட வேண்டியது


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் முன் ஆஜராகாத முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் பத்துப் பேர் கட்சியை விட்டும் நீங்கிக் கொண்டவர்களாக கருதப்படுவார்கள் என கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் ஒழுக்காற்று விதிகளை மீறியதாக தெரிவித்து குறிப்பிட்ட 10 பேருக்கு எதிராக ஒழுக்காற்றுக் குழு நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருந்தது.

கடந்த 29ம் திகதி விசாரணைக்காக ஒழுக்காற்றுக் குழு முன் ஆஜராகுமாறு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இவர்கள் ஆஜராகாது கட்சியின் தீர்மானத்தைப் புறக்கணித்துள்ளனர்.

இதனால், இவர்கள் கட்சியை விட்டு நீங்கிக் கொண்டவர்கள் என கருதப்படுவார்கள்.

அத்துடன், எதிர்வரும் தேர்தலிலும் இவர்களுக்கு வேட்பாளர் பதவி வழங்காதிருக்கவும் கட்சி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

2

ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் உறுப்பினர்கள் ஜெனீவா சென்றமை வெட்கப்பட வேண்டியது என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தம் கூறுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிறுவப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்திற்கு எதிராக முறைப்பாடு செய்ய சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் ஜெனீவா சென்றுள்ளனர். இந்த நிலைமை வெட்கப்பட வேண்டிய ஓர் நிலைமையாகும். எதிர்க்கட்சியில் அமரும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கட்சியின் பிரதிநிதிகளாகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களாகவோ ஜெனீவா செல்லவில்லை.

தனிப்பட்ட ரீதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே ஜெனீவா சென்றுள்ளனர். கட்சி என்ற ரீதியில் ஜெனீவா சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எந்தவொரு <நடவடிக்கைக்கும் பொறுப்பு ஏற்கப்போவதில்லை.
மின்சார நாற்காலி தண்டனையிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் படையினரை பாதுகாத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு நன்றிப பாராட்ட ஜெனீவா சென்றிருக்க வேண்டும்.
எனினும் இந்த தரப்பினர் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக முறைப்பாடு செய்யவே ஜெனீவா சென்றுள்ளனர். உலகின் அனைத்து நாடுகளது ஆதரவும் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது. இன்று நாட்டுக்கு சர்வதேச ரீதியில் எதிரிகள் யாருமில்லை.
கடந்த காலங்களில் ஜெனீவாவைக் காண்பித்து காண்பித்து முன்னாள் ஜனாதிபதியை மின்சார நாற்காலில் வைத்து தண்டிக்கப் போவதாக கூச்சலிட்டவர்கள் யாரின் ஒப்பந்த அடிப்படையில் தற்போத ஜெனீவா செல்கின்றனர் என்பது முழு நாட்டுக்குமே தெரியும் என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.