நன்கொடையாளர்களை நன்றிசொல்லி கௌரவித்த Zam Zam Foundation
ஸம் ஸம் பவுண்டேஷனின் Family Night நிகழ்வு வெள்ளவத்தை எக்ஸெலன்ஸியில் முப்தி யூஸுப் ஹனிபா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஸம் ஸம் பவுண்டேஷனின் வேலைத்திட்டங்களைத் தெளிவுபடுத்துவதும் ஸம் ஸம் பவுண்டேஷனின் வேலைத் திட்டங்களில் பங்கெடுப்பவர்களை அவர்களது குடும்ப சகிதம் அழைத்து நன்றி சொல்லி கௌரவிப்பதும் இந் நிகழ்வின் பிரதான நோக்கமாக இருந்தது.
இந் நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்களும் ஜாமிஆ நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ் ஷெய்க் ஏ.ஸீ அகார் முஹம்மத் அவர்களும் விஷேட அதிதிகளாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.இந் நிகழ்வில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் வர்த்தகப் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர். ஸம் ஸம் பவுண்டேஷனின் ரமழான் காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளும் Feed a Family எனும் வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இவ்வருடம் 6000 குடும்பங்களுக்கு 8000 ருபா பெறுமதியான உலர் உணவுப் பொதி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வை ஸம் ஸம் பவுண்டேஷனின் பணிப்பாளர் சபையின் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Colourful function ! Yes They deserve such a felicitation . Keep it up.Welldone Shaikh Usuf Mufthi .Masahallah.
ReplyDeleteGood Samaritans deserve our reception n appreciation. Weldone Shaikh Usuf Mufthi.
ReplyDeleteWeldone Shaikh Usuf Mufthi .
ReplyDelete