UPFA பொதுச்செயலர் பதவிக்கு கடும் போட்டி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலராக இருந்த பேராசிரியர் விஸ்வ வர்ணபால காலமானதையடுத்து, அந்தப் பதவியைப் பிடிக்க பலத்த போட்டி எழுந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவி, தமக்கே வழங்கப்பட வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி கோரியிருக்கிறது.
அதேவேளை, இந்தப் பதவியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தமக்கு நம்பிக்கையான ஒருவருக்கே வழங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அடுத்த பொதுச்செயலர் பதவிக்கு, கட்சியின் ஆரம்பகால பொதுச்செயலராக இருந்து கடந்த ஆண்டு விலகிக் கொண்ட சுசில் பிரேமஜெயந்தவுக்கும், அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவுக்கும் இடையில் கடும் போட்டி எழுந்துள்ளது.
Post a Comment