பொன்சேக்கா குறித்து, UNP யில் அதிருப்தி
களனி தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் பதவி முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
களனி தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் பதவி ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கே வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளனர். கட்சியின் தற்போதைய அமைப்பாளர் பெவன் பெரேரா பதவியில் நீடிக்க வேண்டுமென கோரியுள்ளனர்.
பொதுத் தேர்தலின் போது கட்சிக்கு சிறந்த முறையில் பெவன் பெரேரா சேவையாற்றியுள்ளதாகவும் இவ்வாறான பின்னணியில் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியில் மாற்றம் கொண்டு வரப்படுவது ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment