UNP யில் புதிய மாற்றங்கள்..?
ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாக பொறுப்பை கட்சியின் மூன்றாம் தரப்பிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் உயர்மட்ட தகவல்களை கோடிட்டு கொழும்பின் ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன.
கட்சியின் முதல் மற்றும் இரண்டாம் தர குழுக்கள் அரசாங்கத்தின் அமைச்சர் பதவிகளை வகிப்பதன் காரணமாகவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக முதலாம் மற்றும் இரண்டாம் தரப்பினர் பொறுப்புடன் செயலாற்ற வேண்டியுள்ளது.
இதன்காரணமாக, கட்சியின் செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுப்பதற்காக மூன்றாம் தரப்பிற்கு பொறுப்புக்களை கையளிக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, ராஜாங்க அமைச்சர்கள், அமைச்சு பதவி வகிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கே இந்த பொறுப்புக்கள் கையளிக்கப்படவுள்ளன.
இதேவேளை, செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் 70 வது வருட பூர்த்தியின் போது புதிய யாப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன்போது, புதிய நிர்வாக முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், கட்சி பதவிகளிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment