SLMC யின் யாப்பு குர்ஆன், ஹதீஸுக்கு அமைவானதா..? றிஸ்வி முப்தியிடம் விளக்கம்கேட்டு கடிதம்
தற்போது நடைமுறையிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாப்பானது குர்ஆன், ஹதீஸ், மஷூரா எனும் சன்மார்க்கம் சார்ந்த வழிகாட்டல்களுக்கு அமைவாக உள்ளதா என பகுப்பாய்ந்து ஆலோசனை வழங்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள மௌலவிகள் இருவரும் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தியிடம் கடிதமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட உறுப்பினர்களான மௌலவி ஏ.எல்.எம். கலீல் மற்றும் மௌலவி எச்.எம்.எம். இல்லியாஸ் ஆகிய இருவரும் கையொப்பமிட்டு உலமா சபைத்தலைவருக்கு கடந்த 23 ஆம் திகதி பதிவுத்தபால் மூலம் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாப்பில் மஷுரா கோட்பாட்டினை வலுப்படுத்துவதற்காகத் தேவையான இடங்களில் நிரந்தரமான மஷுரா உப குழுக்கள் அமைய வேண்டுமா என்பது பற்றியும் அப்படியாயின் எவ்வாறான பொருத்தமான அத்தியாயங்களில் அவற்றை அமைக்கலாம் என்று வழிகாட்டும் படியும் மௌலவிகள் இருவரும் உலமா சபையை வேண்டியுள்ளார்கள்.
முஸ்லிம் காங்கிரஸின் யாப்பின் (3.1), (3.3.A, B, C), (7.3), (8.3 C), (8.9), (8.9 K), (9 D), (11.B) ஆகிய அத்தியாயங்களில் விசேட கவனம் செலுத்தும் படியும் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுக்க நெறிக் கோவையின் சில பிரிவுகளிலும் (4.1 D, 5. 1 B, 5. 1 D) கவனம் செலுத்தும் படியும் கோரப்பட்டுள்ளது. ஒழுக்க நெறிக் கோவையின் பிரதியொன்றும் உலமா சபையின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் யாப்பின் பிரகாரம் அக்கட்சியின் செயற்பாடுகள் அனைத்தும் குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கட்சியில் எடுக்கப்படும் தீர்மானங்கள் அனைத்தும் மஷுரா கோட்பாட்டுக்கு அமைவாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் உலமா சபையிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாங்கள் இருவரும் கட்சியின் தலைவருக்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபடும் நோக்குடன் தலைவரை மாற்றுவதற்கான பொது மகஜரொன்றில் கையொப்பமிட்டதாக பகிரங்கமாக ஊடகங்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது அபாண்டமான குற்றச்சாட்டாகும். இந்த குற்றச்சாட்டுக்கும் எமக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மகஜரின் பிரதியொன்றும் உலமா சபையின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அம் மகஜரில் சதி முயற்சியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இருக்கின்றதா என்பதை ஆராய்ந்து தெளிவுபடுத்துமாறும் உலமா சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் யாப்பும் ஒழுக்க நெறிக்கோவையும் மற்றும் மகஜரின் பிரதிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உலமா சபையின் ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் உதவிகள் செய்யுமாறும் கடிதத்தில் வேண்டப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட உறுப்பினர்களான மௌலவி ஏ.எல்.எம். கலீல், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மஜ்லிஸ் ஏ. ஷுராவின் தலைவராக பதவி வகிப்பவராவார். இதேவேளை மௌலவி எச்.எம்.எம். இல்யாஸ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உலமா பிரதிநிதியாவார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்து இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மௌலவிகள் இருவரும் அக்கட்சியின் யாப்பு தொடர்பாக உலமா சபையின் ஆலோசனைகள் கோரியுள்ளது பற்றி நிர்வாக சபைக் கூட்டத்தில் ஆராயப்படும்.
உலமா சபையில் ஒவ்வோர் துறைக்கும் தனித்தனியான வெவ்வேறு பிரிவு இயங்கி வருகிறது. அப்பிரிவுகளில் இவ்விவகாரம் எந்தப் பிரிவினைச் சேர்ந்ததோ அப்பிரிவு இது பற்றி தீர்மானம் மேற்கொள்ளும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தியும் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக்கும் ‘விடிவெள்ளி’ க்குத்து தெரிவித்தனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அரசியலில் ஈடுபடாத ஒரு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. -ARA.Fareel-
Vetkam, Maulavi marhal idai niruththap pattavudan, pathavihal pariponavudan thaan Al Quran ninaivu vanthatha?
ReplyDeleteMoulavi's you should have been checked this prior to joining them not after kicked off
ReplyDeleteanyway I'm not supporter of SLMC but these Moulavis are looks Joker here
நல்ல விடயம்தான் ஆனால் ஏமாற்றம் என்னவென்றால் குர்ஆன் ஹதீஸ் கு அமைவாகமுதலில் அ இ ஜ உலமாவோ அதன் தலைவரோ நடப்பதில்லையென்பது அந்த இரு மௌலவிகளுக்குமே தெறிந்மிருந்தும் கேற்பது வேடிக்கை,
ReplyDeleteஅ இ ஜ உலமா என்பது கொள்கையுடையவர்களின் அமைப்பு, அதில் இருக்கும் எந்த அமைப்புமே குர்ஆன் ஹதீதை மட்டும் பின்பற்றும் அமைப்பல்ல, தவிர மேலதிகமாக இஜ்மா கியாஸ்,மத்கப், ணலபுக்கள் ஆகியவற்றையும் பின்பற்றுகின்றன
காலம் கடந்த ஞானம் இருவருக்கும்
ReplyDeleteThe SLMC must interdict them. Because they did not do their part well. Now they are searching All Qura'n and Sunnah.
ReplyDeleteAzhar br your aalim sab??your following quran hadees pls keep go.dont blame acju.your pure muslim.masha allah .
ReplyDeleteயாரிடமும் யார் தீர்ப்பு கேட்க போய் இருக்குறார்கள் அப்படியே மனுவில் நீங்கள் எந்த மத்ஹபு என்றும் சொல்லி இருந்தாலுல் அவர்களுக்கு தீர்ப்பு வழங்க இலேசாக இருக்கும் இதில் அரசியலலுடன் சம்மந்தமும் இருப்பதால் நீதி மன்றமும் அக்குமுக்காகிடுமோ தெரியாது
ReplyDeleteOne group (SLMC, ACMC ) to lead political matters and other group (ACJU) to lead other Islamic principles are not according to Hadees & Quaran. One Group to lead to all aspects. Then only you will find real Muslim leaders.
ReplyDeletewe need to welcome this question by our mufti. Because ACJU realise at least now, we don't need to bother about in which situation they ask this. Because of the hadrees ''all action are depots on the intentio' we don't know his intention Allah knows it.
ReplyDeleteI would like to raise question from our mufti 1.how is the Halal certificate income is Bering used?
2. Who is benifiting it?
3. Is this is a bithulmall money of Sri Lanka, if Ian not wrong.
4. Recent invest of our mother in Colombo she was sot dead. Because she went out to give seltzer for her children.
5.ACJU not far from this mother house.
6. Is this money being used to our needy umma?
7. Please forgive me if I wrong. Is it Being used to few moulavi family as wages?
8. Allah forgive me if I am wrong
கேவலம், அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காய்கள் ஆகும் குரானும்,ஹதீசும்.
ReplyDeleteகுரானையும், ஹதீசையும், மார்க்கத்தையும் சீரழிப்பதில் முக்கிய பங்கு மவ்லவிகளுக்கே.