Header Ads



மைத்திரியின் உத்தரவு புறக்கணிப்பு - SLFP யினர் பேரணியில் பங்கேற்பு


மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியினரின் பேரணி தற்போது கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் ஆரவாரங்களுடன் வரவேற்பு அளி்க்கப்பட்டது. கடுமையான நெரிசலுக்கு மத்தியிலேயே மகிந்த ராஜபக்ச நிகழ்வு மேடையை அடைந்துள்ளார்.

ஜன சட்டன என்ற பெயரில்  அரசாங்கத்துக்கு எதிராக நடத்தப்படும் இந்தப் பேரணியில், தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த குமார வெல்கம, மகிந்தானந்த அளுத்கமகே, பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பவித்ரா வன்னியாராச்சி, ரி.பி.எக்கநாயக்க, ஜி.எல்.பீரிஸ், பந்துல குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும, காமினி லொக்குகே, றோகித அபேகுணவர்த்தன உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

ஜேவிபியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவும் இதில் உரையாற்றுகிறார். இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான மகிந்த ஆதரவாளர்களும் பங்கேற்றுள்ளனர். கூட்டு எதிர்க்கட்சிகளின் இந்தப் பேரணியால் ஹைட்பார்க் மைதானத்தைச் சுற்றியுள்ள நகர மண்டபம், இப்பாவல சந்தி உள்ளிட்ட இடங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.