Header Ads



சிறுகதைப்போட்டி - SI நாகூர்கனி முதலாமிடம், மொகமட் ராபி இரண்டாமிடம்

-Omar Mukthar-

புகழ்பெற்ற எழுத்தாளரான மறைந்த திரு. எஸ். பொன்னுத்துரை (எஸ். பொ.) அவர்களின் ஓராண்டு ஞாபகார்த்த நினைவுதினைத்தையொட்டி அவுஸ்திரேலியாவில் இருந்து இயங்கும் பிரபல 'அக்கினிக்குஞ்சு' இணையத்தளம் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் உலகளாவிய ரீதியில் சிறுகதைப்போட்டியொன்றை அறிவித்து நடாத்தியிருந்தது.

மேற்படி சிறுகதைப்போட்டியில் உலகெங்கும் வாழும் நூற்றுக்கணக்கான தமிழ்பேசும் எழுத்தாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். போட்டியின் முடிவுகள் கடந்தவாரம் அக்கனிக்குஞ்சு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இப்போட்டியில் நமது நாட்டைச்சேர்ந்த மூன்று எழுத்தாளர்கள்  முதல் மூன்று இடங்களையும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பொழும்பு- 12 ஐச் சேர்ந்த எழுத்தாளர் . எஸ் ஐ. நாகூர் கனி அவர்கள் முதலாம் இடத்தை வென்று 300 வெள்ளி பரிசினையும் திருகோணமலை பாலையூற்றைச் சேர்ந்த எழுத்தாளர் . மூதூர் மொகமட் ராபி இரண்டாவது இடத்தை வென்று 200 வெள்ளியையும் பெறும் அதேவேளை மூன்றாம் இடத்தைப் பெற்று 100 வெள்ளியை புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச்சேர்ந்த திரு. நடராசா ராமநாதன் வென்றுள்ளார்.

இம்மூவரில் மூத்த எழுத்தாளர் . நாகூர் கனி மற்றும் . மூதூர் மொகமட் ராபி ஆகியோர் ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம் தமது 12வது ஆண்டு நிறைவினையொட்டி கடந்த 2013ல் நடாத்திய நாடு தழுவிய சிறுகதைப்போட்டியிலும் முறையே இரண்டாம் மற்றும் ஆறுதல் பரிசுகளை வென்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது எழுத்தாற்றல் மூலமாக நமது சமூகத்தின் திறமையினை உலகமெல்லாம் அறியச்செய்திருக்கும் இவர்களை நாமும் வாழ்த்துவோம் - 

3 comments:

  1. ALhamdulillah.. i'm proud as a daughter of Kalabooshanam, kaatib-ul-haq S.I. Nagoor Ghany :) :)

    ReplyDelete
  2. ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினரை கவர்ந்த நமது எழுத்தாளர் நாகூர் கனி இப்போது அவுஸ்திரேலிய அக்கினிக்குஞ்சுகளையும் தன்வசமாக்கி தனது முத்திரையை பதித்திருக்கின்றார். அதேபோல மூதூர் மொகமட் ரஃபியும் அவரது எழுத்துத்துறையில் முன்னேறி வருவதை இச்செய்தி கூறுகின்றது. முல்லைத்தீவு ராமநாதனுக்கும் வாழ்த்துக்கள்!

    அதுசரி, வெற்றி பெற்ற நமது இலங்கையர்களை பாராட்டும்போது பொதுவாகப் பாராட்ட வேண்டியதுதானே..? அதென்ன 'நமது சமூகத்தின் திறமையினை' என்ற ஒரு அழுத்தம்..?

    இலங்கைத் தமிழர்களால் நடாத்தப்படும் அக்கினிக்குஞ்சே பேதம் பாராது திறமைக்கு முதலிடம் கொடுத்திருக்கும்போது ஒமர் முக்தார் உங்களுக்கு ஏன் இந்தச் சிறுபுத்தி..?

    ReplyDelete
  3. வாழைத்தோட்டம் தந்த கனி - எமது நாகூர் கனிக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.