இலங்கையில் காலூன்றும், RSS தீவிரவாதம்
தனது அகண்ட பாரதக் கனவை நிறைவேற்றும் முனைப்பில் இந்துத்துவ அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் முனைப்புடன் உள்ளதை செய்திகள் சொல்கின்றன. ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பல்கலைக்கழகத்தின் இந்து மாணவர் ஒன்றிய விழாவில் இராமகிருஷ்ணா மிஷன் சார்பில் கலந்துகொண்டார் இந்திய நாடாளுமன்ற எம்.பி. தருண் விஜய். ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய செயல்பாட்டாளராக இருக்கும் பாஜக எம்பியின் இந்தப் பயணம், இந்து மாணவர் அமைப்பின் மூலம் இலங்கை தமிழர்களிடையே இந்துத்துவத்தை நிலைநிறுத்தும் முயற்சி என்று இலங்கையைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
தருண் விஜய்யின் தமிழ் ஆர்வம்
தமிழை தாய்மொழியாகக் கொண்டிராத, தமிழ் நாட்டில் வாழ்ந்திராத, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டிராத உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி தருண் விஜய் கடந்த சில காலமாய் தமிழ் குறித்தும் தமிழர்கள் குறித்தும் மக்களவை வரை பேசிவருகிறார். திருவள்ளுவருக்கு ஹரித்துவாரில் சிலை எழுப்பும் முயற்சியிலும் இருக்கிறார். திருக்குறள் குறித்து தொடர்ந்து இந்தியாவெங்கும் பேசிவருவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் அமைப்புகள் இவருக்கு குறள்நெறிக் காவலர் விருது வழங்கியிருக்கின்றன. ஆர்எஸ்எஸ் இதழான பஞ்சன்யாவின் ஆசிரியராக இருந்த தருண் விஜய், தமிழ் ஆர்வலராக காட்டிக் கொள்வது உள்நோக்கம் கொண்டது என்று அரசியல் நோக்கர்கள் ஏற்கனவே விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில் கொழும்பு பல்கலைகழகத்தின் இந்து மாணவர் அமைப்பின் விழாவுக்கு முக்கிய விருந்தாளியாக தருண் விஜய் அழைக்கப்பட்டிருப்பது இந்த விமர்சனத்தை இன்னும் கூர்மையாக்கியிருக்கிறது.
இலங்கை தமிழர்களிடம் ஆர்எஸ்எஸ்
2013-ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி, இலங்கை அரசு இலங்கை தமிழர்கள் மீது பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்திய கலாச்சாரத்துடம் பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்புள்ள இலங்கை தமிழரின் நலன் காக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். பிரபாகரனின் மரணம் தொடர்பான நேர்க்காணலின் போது, ஓய்வுபெற்ற இந்திய கடற்படை கமாண்டோவாகப் பணியாற்றிய கார்கில் எம்.சுப்ரமணியம் இலங்கையில் இறுதிப் போரின் போது நூற்றுக்கணக்கான கோயில்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் அவற்றைப் பார்வையிட ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்று வந்ததாகவும் இப்போது.காமிடம் தெரிவித்திருந்தார்.
அகண்ட பாரத கனவு
இலங்கை தமிழர்களிடையே ஆர்எஸ்எஸ் ஊடுருவல் குறித்து மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி இப்போது.காமிடம் பேசினார். “பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே ஈழத்தின் கிழக்குப் பகுதிகளில் விஸ்வ ஹிந்து பரிஷத் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கு இடையே முரண்பாட்டை உருவாக்கும் பணிகளைச் செய்து வந்தது இந்த அமைப்பு. போருக்குப் பிறகு, புனர்வாழ்வு பணிகளுக்காக இந்தியாவிலிருந்து தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் துணை அமைப்புகள் ஈழத் தமிழர்களிடம் ஊடுருவின” என்று சொன்ன அவர், தமிழர்களிடைய இந்துத்துவத்தை திணிப்பதும் இஸ்லாமியருக்கும் இந்துக்களுக்குமிடையே முரண்பாட்டை உருவாக்கி அதன் மூலம் அகண்ட் இந்து தேசத்தை உருவாக்குவதும்தான் இந்த அமைப்புகளின் நோக்கம் என்றார்.
இனவாதிகளின் கைகோர்ப்பு
ஆர்எஸ்எஸ் உடன் பவுத்த இனவாத அமைப்பான பொது பல சேனா இணைந்து இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக பொது பல சேனாவின் தலைவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார். பொது பல சேனா கடந்த ஆண்டு முஸ்லிகளுக்கு எதிரான கலவரத்தை நடத்தியதும், அதில் நான்கு பேர் பலியானதும் குறிப்பிடத்தகுந்தது. “இந்துத்துவ அமைப்புகளின் அறிக்கைகளில் பிரதான எதிரிகளாக கிறித்தவர்களையும் முஸ்லிம்களையும் சொல்கிறார்களே தவிர, சிங்கள பவுத்த பேரினவாதம் குறித்து அவர்கள் வாய்த்திறப்பதில்லை. எனவே இந்து, முஸ்லீம் மக்களிடையே முரண்பாட்டை வளர்ப்பதுதான் அவர்களுடைய நோக்கம் என்பதை புரிந்துகொள்ளலாம்” என்கிறார் திருமுருகன் காந்தி. 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரிலிருந்து மீண்டு மூச்சுவிட ஆரம்பித்திருக்கும் இலங்கை தமிழர்களை இந்துத்துவ அமைப்புகள் மீண்டும் மற்றொரு அசாதாரண சூழலுக்கு தள்ளுகின்றனவோ என்கிற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.
முற்றிலும் ஆதாரமற்ற அச்சமூட்டல் செய்தி.
ReplyDeleteபாகிஸ்தானில் உருவான இஸ்லாமிய அடிபப்டைவாத அமைப்பான ஜமாத்தே இஸ்லாமி (இந்த அமைப்பு பங்களாதேச பிரிவினையில் பயங்கர கொலைகளில் ஈடுபட்டது) அமைப்பு இலங்கையில் இருக்க முடியும் என்றால், சவுதியின் வஹ்ஹபிச அடிப்படைவாத அமைப்புக்கள் இலங்கையில் இருக்க முடியும் என்றால், ஒரு இந்து அமைப்பை எப்படி நீங்கள் எதிர்க்க முடியும்?
இலங்கையில் அதிகம் மத அமைப்புக்கள் முஸ்லிம்களிடமே உள்ளன.
ஹிந்துக்களுக்கென்று ஒரு அமைப்பாக rss காவி தீவிரவாதிகள் இருந்துவிட்டால் அது எமக்கு தேவையில்லாத விடயம். அதுவே முஸ்லிம்களின் பக்கம் கத்தியை நீட்டினால் நாம் அதைபற்றி பேச தான் செய்வோம். அகண்ட பாரதம் என்பது சிங்கள தேசத்திற்கே ஒரு நாள் ஆப்பு வைக்கும். எனவே rss தீவிரவாதத்தின் உண்மை முகத்தை சிங்களவர்களிடமும் தோலுறுத்தி காட்டுவோம்
DeleteHari Thivahar நான்தான் முதலாவது RSS தீவிரவாதி என்பதை பகிரங்கமாக முன்வைத்து இருக்குறீர்கள்.
ReplyDeleteஇந்திய அரசின் மிகவும் கீழ்த்தரமான செயலினால் பாகிஸ்தானில் இருந்து பங்களாதேசை பிரித்த பொது எந்த தேச பக்தனும் பிரிவினைவாதத்துக்கு துணைபோக மாட்டான்.
பிரிவினைவாதத்தை அப்போது எதிர்த்த காரணத்தினாலும், இப்போது மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்குள்ள சக்தியாக மாறியுள்ளதாலும். எதிர்காலத்தில் பங்களாதேச மக்கள் நீங்கள் குறித்த கட்சியை நம்பி உள்ளதாலும் அச்சமடைந்த இந்தியாவின் வாலில் இயங்கும் கசிநாவுக்கு இந்தியா கொடுக்கும் நெருக்கதலினால் அந்த கட்சியின் தலைவர்களின் மீதி 100% பொய்க் குற்றச் சாட்டுக்களை சுமத்தி படுகொலை செய்வதை உலகமே அறியும்.
உங்களைப் (RSS) போன்று தமது இனத்தையே கீழ்சாதி என்று கேவலமாக கொன்று குவிக்கும் கட்சியல்ல அவர்கள். இந்தியாவில் நாள்தோறும் நடக்கும் சாதிக் கொடுமையைப் போல இலங்கையிலும் நடாத்த முனைகிறீர்கள். இவ்வளவு காலமும் இலங்கையில் இந்துக்கள் எவ்வித சாதி வேற்றுமையும் இன்றி மிகவும் அன்பாகவே இருக்கிறார்கள். தயவு செய்து அவர்களின் மனதில் இரத்த வெறியை திணிக்காதீர்கள்.
பொதுவாக எல்லா இந்து சகோதரர்களிடமும் குறிப்பாக உங்களிடம் தயவாக வேண்டிக் கொள்வது முதலில் உங்களுக்கு என்று பிரதானமாகவும் உண்மையாகவும் இருக்கும் 04 வேதங்களான இரிக், சாம, அதர்ம மற்றும் யசுர் வேதங்களை மட்டும் படியுங்கள் அதனை விளங்குங்கள் அதன்படி மட்டுமே உங்கள் மதத்தை பின்பற்றுங்கள்.
தயவு செய்து பிறரின் கீழ்த்தரமான அறிவுரைகளுக்கு அடிபணியாதீர்கள். உலகில் தொழில் செய்வதற்காக எவ்வளவோ கற்கிறீர்கள் ஆனால் வாழ்க்கைக்காக உங்களுக்கு வழிகாட்ட வந்த மேற்படி 4 வேதங்களையும் 99% மான இந்துக்கள் கண்ணால் கூட கண்டதில்லை.
Hari Thivahar உங்களுக்கு அடிப்படை வாதம் என்றால் என்னவென்று தெரியுமா?
ReplyDeleteஎந்த ஒரு மதத்தினரும் தமது மதத்தில் இப்படித்தான் வாழ வேண்டும் என கூறுவதற்கு அவரவர்களுக்கு புனித வேதங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் வாழ்க்கையை நடத்திக் கொண்டு செல்வதுதான் அவர்களை நேர்வழியில் செலுத்தும். அது முஸ்லிம்களுக்கு மட்டுமானதல்ல எல்லா மதத்தினருக்கும் உள்ளதுதான்.
ஆனால் துரதிருஸ்டமாக முஸ்லிம்களைத் தவிர ஏனைய எல்லா மதத்தினரும் தமக்கு இறைவனால் இப்படித்தான் வாழ வேண்டும் என அறிவுரை கூறி வழங்கப்பட்ட இறை வேதங்களை தூர எறிந்துவிட்டு அல்லது மாற்றி அமைத்துவிட்டு தமது மனம் சொல்லும் போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதில் நீங்களும் அடங்குகிறீர்கள்.
உங்கள் கீழ்த்தரமான வாழ்க்கையை முஸ்லிம்கள் பின்பற்றாமல் இறைவனால் வழங்கப்பட்ட நெறியை மட்டுமே பின்பற்றவேண்டும் என எமக்கு அறிவுறுத்திக் கொண்டிருக்கும் இயக்கங்கள்தான் உங்களினதும் உலகினதும் பார்வையில் அடிப்படைவாத அமைப்புக்கள். நீங்கள் அவ்வாறு கூறுவதை இட்டு நாங்கள் சந்தோசப்படுகிறோம். ஏனென்றால் நாங்கள் இறைவனால் வழங்கப்பட்ட கட்டளைக்கிணங்க நடக்க முயற்சிக்கிறோம் என்பதி இட்டு. ஆனால் மிகவும் பரிதாபம் உங்கள் நிலை இறை வழிகாட்டலை தூக்கி எறிந்துவிட்டு RSS போன்ற காட்டுமிராண்டிகளின் வழிநடக்க நினைத்து இறைவனின் கோவத்திற்கு அலாகிவிட்டீர்கள். இனியாவது உங்கள் உண்மையான வேதங்களைப் படித்து உண்மைய விளங்கி அதன்படி நடக்க முயற்ச்சியுங்கள். (சாதி பாருங்கள் என்றோ, சிலைகளை வணங்குங்கள் என்றோ உங்கள் எந்த உண்மையான வேதங்களிலும் 100% இல்லை. அப்படி சொல்லுமாயின் அது 100% பொய்யான அல்லது மனித இடைச்செருகல்களுக்கு உட்பட்டிருக்கிறது)
முனவ்வர், ஒருபக்கம் ஆலோசனை, அறிவுரை, மறுபக்கம் அவதூறு, பொய்க் குற்றச்சாட்டு. உங்களை எப்படி நம்புவது?
ReplyDeleteஎன்னை RSS காரன் என்று அவதூறு சொல்வது கேவலம்.
பங்களாதேஷ் இந்திய சதியால் பிரியவில்லை, வரலாற்றைப் படியுங்கள். இன்றைக்கும் 90% மான வங்காளிகள் பாகிஸ்தானை வெறுக்கின்றார்கள். வங்காள சுதந்திர யுத்தத்தில் பாகிஸ்தான் இராணுவம் செய்த கற்பழிப்புகள், அத்துமீறல்கள் எண்ணிக்கையில் அடங்காதவை.
ஒவ்வொரு மதத்திலும் அடிப்படைவாத, பயங்கரவாத அமைப்புக்கள் உள்ளன. தங்கள் தங்கள் மதத்தில் இருப்பவற்றை சரி கண்டுகொண்டு, மற்ற மதங்களில் உள்ளவற்றை மட்டும் குறை கூறுவது எப்படி நியாயம்?
மிகத்தெளிவான பதில் சகோதரர் முசம்மில் அவர்களே!
ReplyDeleteBro. Hari Thivahar,
ReplyDeleteசரி, அதெல்லாம் இருக்கட்டும் உங்களிடம் நான் வினயமாகக் கேட்டுக் கொண்ட விடயமான உங்கள் உண்மையான 04 வேதங்களைப் படிக்குமாறு கூறினேன் உண்மையை விளங்குவதற்காக. அது தொடர்பாக ஏதாவது யோசித்தீர்களா ? அதற்கு நீங்கள் முடர்சிக்காவிட்டால் நிச்சயமாக அநீதியாளர்களின் பட்டியலில் உள்ளீர்கள்......
மேலதிக விளக்கம் தேவையாயின் உங்கள் மெயில் அட்றசை அனுப்புங்கள். எல்லாவற்றையும் இங்கு குறிப்பிடுவது மற்றவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கலாம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இப்படி ஒரு நிகழ்வு கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது என்பதற்க்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா...
ReplyDeleteபி.கு: நானும் ஒரு கொழும்புப் பல்கலைக்கழக இந்து மாணவர் தான்..
தான் கல்வி கற்கும் பல்கலைக்களகத்தில் நடப்பது கூட தெரியாத அளவுக்கு இருக்கிறார் இந்த இந்து மாணவன். (ஒரு வேளை நான் சொன்னது போல இந்து வேதங்களைத் தேடிப்படிப்பதில் ஈடுபட்டு இதையெல்லாம் தேவையற்றது என்று வெறுத்து ஒதுங்கி இருப்பாரோ )
ReplyDeleteஇலங்கை பிரச்சனை பற்றி ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை இந்துக்களும் பவுத்தர்களும் ஒற்றுமையாக ஒன்றாகவே இலங்கையில் வாழ விரும்புகிறார்கள். இலங்கையில்; தீவிரமக நடைபெற்ற கொண்டிருப்பது மேற்கு வெளிநாநாட்டு கூலிகளால் நடத்தபடும் தீவிரமான கிறித்துவ மதமாற்றம். இவற்றுக்கு உதவியாக கண்டு பிடிக்கபட்டவை தமிழீழத் (கிறித்துவ )தனிநாடு வெளிநாடுகளில்வாழும் ஈழத்தமிழர்கள் எனற புலம்பெயர்ந்த புலிகள் தமிழர்கள் புலிகளின் பேச்சை கேட்டால் இந்திய தமிழ் பேசும் இந்துக்களையும் நாடுநாடாக அகதிகளாக அலையவிட்டுவிடுவார்கள்.
ReplyDelete