NWC இன் ஏற்பாட்டில் நிந்தவூரில் நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு
நிந்தவூர் நலன்புரிச்சபையின் -NWC ஏற்பாட்டில் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இன்று வியாழன் (2016 .03.03 ) பாடசாலை பல்லூடக மண்டபத்தில் நடைபெற்றது. எழுபது ஆசிரியர்கள் கலந்து கொண்ட இக்கருத்தரங்கிலே “நீரிழிவு நோய் பற்றி நீங்கள் அறிந்ததும் அறியாததும்” என்ற தொனிப்பொருளில் NWC இன் சுகாதாரப்பிரின் பொறுப்பாளர் டாக்டர் திலீப் மபாஸ் அவர்களால் விளக்கங்கள் வழங்கப்பட்டன.
பிரதேசத்தின் பல்துறையை பிரதிநிதிப்படுத்தும் பிரமுகர்களைக்கொண்டு அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் நலன்புரிச்சபையின் (NINTAVUR WELFARE COUNCIL) தலைவர் ஒய்வு பெற்ற கல்வி அதிகாரி அல்ஹாஜ் யாகூப் ஹசன் அவர்கள் தனது ஆரம்ப உரையிலே ‘நிந்தவூர் பிரதேசத்தின் எதிர்கால நலன்களை மையமாகக்கொண்டு இன்ஷா அல்லாஹ் கல்வி சுகாதாரம்,உட்கட்டமைப்பும் இடர் முகாமைத்துவமும், பொருளாதார அபிவிருத்தி சுற்றாடல்,சமைய கலாச்சாரம் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளிலே இவ்வமைப்பு திட்டமிட்டு செயற்பட இருக்கின்றது ”எனக்கூறினார்.
பிரதேச மக்களின் சுக நல மேம்பாட்டினை மையமாகக்கொண்டு இயங்கும் நிந்தவூர் நலன்புரிச் சபையின் சுகாதாரப்பிரிவின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வினை NWC அமைப்பின் திட்டங்களிற்கான முகாமையாளர் எம்.ஐ.உமர் அலி அவர்கள் பாடசாலை நிருவாகத்துடன் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தார்.
Post a Comment