Header Ads



சுத்­தி­க­ரிப்­பாளராக தொழிலை ஆரம்­பித்த NO LIMIT உரிமையாளரின் மனதுதிறந்த பேட்டி (பகுதி 1)

NOLIMIT உரிமையாளர் N.L.M. முபாறக்

நேர்­காணல்: இனோகா பெரேரா பண்­டார, தமிழில்: ஒகொ­ட­பொல றினூஸா 

காத்­தான்­கு­டியில் இருந்து கொழும்பு சாஹிறாக் கல்­லூ­ரிக்கு வரும்­போது இவர் ஒரு சிறிய பையன். எனினும் காத்­தான்­கு­டியில் இருந்து முதன்­மு­றை­யாக சவூதி அரே­பி­யா­வுக்குச் செல்­கின்­ற­போது இவர் வலி­மை­மிக்க ஓர் இளைஞர். வர்த்­தக அறிவும், மாறு­பட்ட கோணத்தில் சிந்­திக்கும் இயல்பும் இவ­ருடன் கூடவே பிறந்த திறன்­க­ளாகும். பெஷன் தொடர்பில் எழுந்த ‘காய்ச்­சலால்’ முதிர்ச்­சி­ய­டைந்து சாதித்­த­வ­ரான N.L.M. முபாறக், ஒரு புது­மை­யான மனிதர். NOLIMIT மற்றும் Glitz தோன்­றி­யது இந்தப் புது­மை­யான மனி­த­ரி­டத்­தி­லி­ருந்தே. இந்த வடி­வ­மைப்­பா­ள­ரி­ட­மி­ருந்தே.

மிகவும் பரந்­த­ள­வி­லான வாடிக்­கை­யாளர் வலை­ய­மைப்­பொன்றைக் கொண்­டி­ருந்­த­போ­திலும்,  ஒரு­போதும் இவர் பொது மக்கள் முன்­னி­லையில் தோன்­றி­ய­தில்லை. முதன் முறை­யாக அந்தக் கொள்­கையைத் தகர்த்து இவர் உங்­களைச் சந்­திக்க வந்­துள்ளார்.  

நீங்கள் இந்த நாட்டில் பரந்த பெஷன் வலை­ய­மைப்பை உரு­வாக்­கிய வர்த்­தகர்?
வர்த்­தகர் என்று சொல்­வ­தை­விட தொழில் முயற்­சி­யாண்­மை­யாளர் என்று அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தையே நான் விரும்­பு­கின்றேன். ஏனெனில் வர்த்­தக நோக்­கங்­களைக் கடந்த மிகச் சிறந்த நோக்­கங்கள் NOLIMIT இற்­குள்ளும் என்­னுள்ளும் இருக்­கின்­றன.  NOLIMIT என்­பது இன்று வளர்ந்து வரு­கின்ற வர்த்­த­கர்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யான ஒன்­றாகும். அவர்­க­ளுக்கு முன்­மா­திரி ஒன்றை வழங்­கு­கின்ற தொழில் முயற்­சி­யாண்­மை­யா­ள­ரா­கவும் தொழி­ல­தி­ப­ரா­கவும் என்னை நான் காண்­கின்றேன். 

நீங்கள் எவ்­வாறு அப்­படிக் கூறு­வீர்கள்?
எனக்கு இருப்­பது பெஷன் குறித்த ‘காய்ச்சல்’. இது என்­னு­ட­னேயே ஒன்றிப் பிறந்­தது. இந்தக் காய்ச்சல் கார­ண­மாக நான் பெஷன் பற்றி நிறை­யவே சிந்­திக்­கின்றேன். வர்த்­தகக் கருத்­தேற்­புக்­களை (Business Concepts) உரு­வாக்­கு­கின்றேன். அதன் மூலம் தொழில்­வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­து­கின்றேன். நான் இந்த நாட்டில் சில்­லறை வணிகத் துறையை (Retail Industry) மாற்­றி­ய­மைத்து அதற்குப் புதி­ய­தொரு வடி­வத்தைக் கொடுத்தேன். 

நீங்கள் இந்­நாட்டில் எந்­த­ளவு எண்­ணிக்­கை­யான தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கி­யுள்­ளீர்கள்?
கடந்த 24 வருட காலத்­தினுள் நாம் இந்த நாட்டின் சில்­லறை வணிகத் துறையில் 10,000 இற்கும் அதி­க­மான தொழில்­வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம். சில­வேளை இத­னை­விட அதி­க­மா­கவும் இருக்­கலாம். பாட­சா­லையை விட்­டு­வி­ல­கிய இளை­ஞர்­களை உள்­வாங்கி, அவர்­க­ளுக்குச் சிறந்­த­தொரு பயிற்­சியை வழங்கி, அவர்­களின் நடை­யுடை பாவனை மற்றும் மனப்­பாங்கு என்­ப­வற்றில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம்.  அவ்­வாறு உரு­வா­கி­ய­வர்­களுள் பலர் இன்று நாட்­டிற்கு அந்­நியச் செலா­வ­ணியை ஈட்­டித்­த­ரு­கின்ற விதத்தில் சர்­வ­தேச ரீதியில் பணி­யாற்­று­கின்­றனர். NOLIMIT இல் பணி­யாற்­றி­ய­தாகச் சொன்­ன­வுடன் அவர்­க­ளுக்கு இன்று சர்­வ­தே­சத்தில் பாரிய வர­வேற்புக் கிடைக்­கின்­றது. 

உங்­க­ளது பெஷன் வலை­ய­மைப்பில் தொழில்­வாய்ப்­புக்கள் முஸ்லிம் இனத்­த­வர்­க­ளுக்கு மாத்­தி­ரமா?
இது சகல இனங்­க­ளையும் மதங்­க­ளையும் சேர்ந்­த­வர்கள் பணி­யாற்­று­கின்ற ஓரிடம். நூற்­றுக்கு, ஐம்­பது – ஐம்­பது வாய்ப்­புக்கள் அவர்­க­ளுக்கும் உள்­ளது. நான் தொழில்­வாய்ப்­புக்­களை வழங்­கு­வது இலங்­கை­யர்­க­ளுக்கு. எமது வாடிக்­கை­யா­ளர்­களுள் பல்­வே­று­பட்ட வர்க்­கத்தைச் சார்ந்­த­வர்­களும் உள்­ளனர். அதே­போன்­றுதான் எமது பணி­யாட்­தொ­கு­தி­யி­னரும். 

உங்­க­ளது வர்த்­த­கத்தின் நோக்கம் என்ன? 
எந்­த­வொரு வர்த்­த­க­ருக்கும் மேலி­ருந்து கீழ் வரை (top to bottom) குறிப்­பான கவ­னக்­கு­வி­வொன்று இருக்க வேண்டும். அத­னூடே வாடிக்­கை­யாளர் மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும். இறு­தியில் மக்கள் மகிழ்ச்­சி­ய­டைய வேண்டும். NOLIMIT இல் இருப்­பது முற்­றிலும் மகிழ்ச்­சியை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­மைந்த இத்­த­கை­ய­தொரு குறிக்­கோளே. 

சில நிறு­வ­னங்­களில் வாடிக்­கை­யாளர் மீது கோபத்­துடன் இருப்­ப­தைப்போல் பெண் விற்­ப­னை­யாளர் (Sales Girl) பத­வி­யி­லுள்ள யுவ­திகள் இருக்­கின்­றனர். இது சில்­லறை வணிகத் துறையின் இயல்பா…
இல்லை. ஏதே­னு­மொன்றைக் கொள்­வ­னவு செய்­தாலும், செய்­யா­வி­டினும் வாடிக்­கை­யா­ள­ருக்கு மகிழ்ச்­சி­யுடன் உத­வு­வ­துதான் சில்­லறை வணிகத் துறையின் ஒழுக்க நெறி­யாகும். NOLIMIT பணி­யா­ளர்­களும் அவ்­வா­றுதான். எமது நிறு­வ­னத்தில் உயர்­மட்­டத்­தி­லி­ருந்து அடி­மட்டம் வரை­யான அனைத்துப் பணி­யாட்­தொ­கு­தி­யி­னரும் இத்­த­கைய மகிழ்ச்­சி­யுடன் வேலை செய்யும் உளக்­க­ருத்­துக்கு இயை­பாக்கம் அடைந்­த­வர்­க­ளே­யாவர். தனது உய­ர­தி­காரி இருந்­தாலும் சரி, இல்­லா­வி­டினும் சரி அவர்கள் இத­ய­சுத்­தி­யுடன் பணி­யாற்­றுவர். எமது முன்­னேற்­றமும் அதுதான். 

பணி­யா­ளர்­களின் மனப்­பாங்கில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தென்­பது இல­கு­வாக அமைந்­ததா?
வாழ்க்­கையின் பழக்­க­மாக அதனை மாற்­றிக்­கொண்டால் அது கடி­ன­மான ஒன்­றல்ல. வாடிக்­கை­யாளர் திருப்­தி­ய­டைந்தால் மாத்­தி­ரமே அவர்கள் மீண்டும் எம்­மிடம் வருவர். அவ்­விதம் அவர்கள் மீண்டும் மீண்டும் வந்­தால்தான் எமது நிறு­வனம் தொடர்ந்து இயங்கும். அவ்­வாறு தொடர்ந்து இயங்­கினால் மாத்­தி­ரமே தமது தொழில் நீடிக்கும் என்ற யதார்த்­தத்தைப் பணி­யா­ளர்கள் புரிந்து கொள்­வதே முக்­கி­ய­மாகும். 

சிறந்த மனப்­பாங்கை உரு­வாக்கி பயிற்­று­விக்­கப்­பட்ட பணி­யா­ளர்கள் உங்கள் நிறு­வ­னத்­தை­விட்டு வில­கு­வ­தற்கு நீங்கள் இட­ம­ளிக்­கின்­றீர்­களா?
எம்­மிடம் உள்­ள­வர்­களில் நூற்­றுக்கு இரு­பத்­தைந்து வீத­மானோர் 25 வய­திற்­குட்­பட்ட இளைஞர் யுவ­திகள். பத்துப் பதி­னைந்து வரு­டங்கள் தொடர்ச்­சி­யாக எம்­மி­டமே பணி­யாற்ற வேண்­டு­மென்ற எந்­த­வொரு நிபந்­த­னை­யையும் நாம் விதிப்­ப­தில்லை. ஒரு கதவு மூடப்­ப­டும்­போது இன்­னு­மொரு கதவு திறக்­கப்­ப­டு­கின்­றது. வில­கிச்­செல்­கின்ற அள­வுக்கு, நாம் புதி­ய­வர்­களை ஆட்­சேர்ப்புச் செய்து பயிற்­று­விக்­கின்றோம். அது எமக்குப் பிரச்­சி­னை­யல்ல. 

உங்­க­ளு­டைய முகா­மைத்­துவப் பாங்கு யாது?
அது ஏதேனும் செயற்­பா­டு­க­ளுக்கு அமை­வாக நிகழ்­கின்ற ஒன்று. மேலி­ருந்து கீழ் வரை சக­ல­ருக்கும் வழங்­கப்­ப­டு­கின்ற கட­மை­யொன்று உள்­ளது. அவ­ர­வ­ருக்­கென அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அந்த அதி­கார வட்­டத்­தினுள் அவர்­க­ளுக்­கான சுதந்­தி­ரமும் உள்­ளது. சக­ல­வற்­றிலும் தலை­யி­டு­வதை விடுத்து குறித்த வட்­டத்­தினுள் தொழிற்­ப­டு­வதே எனது பாங்கு. 

உங்­க­ளுக்கும் பணி­யாட்­தொ­கு­தி­யி­ன­ருக்­கு­மி­டையே நில­வு­வது, கொடுக்கல் வாங்­கல்கள் மாத்­தி­ரமா அல்­லது அத­னையும் தாண்­டிய பிணைப்­பொன்றா? 
சிறந்த பணி­யாளர் ஒருவர் கிடைப்­ப­தென்­பது சிறந்­த­தொரு மனைவி கிடைப்­ப­தற்குச் சம­மா­ன­தாகும். பண்­பற்ற பணி­யாளர் ஒரு­வ­ருடன் வேலை செய்­வ­தா­னது கொடூ­ர­மான மனை­வி­யுடன் வாழ்­வ­தற்குச் சம­மா­ன­தாகும். நிறு­வ­னத்தின் முன்­னேற்­ற­மா­னது பணி­யாட்­தொ­கு­தி­யி­னரின் கைக­ளி­லேயே தங்­கி­யுள்­ளது. அதனால் அவர்­க­ளுடன் எனக்­குள்­ளது ஒரு பிணைப்­பே­யாகும். 

தீர்­மா­னங்­களை மேற்­கொள்­கின்ற போது நீங்கள் எவ்­வாறு சிந்­திக்­கின்­றீர்கள்?
அவை மிகத் துரி­த­மான தீர்­மா­னங்­க­ளாகும். இன்று பார்த்து நாளை பார்த்து. இன்னும் கொஞ்சம் பார்த்து எடுக்­கப்­ப­டு­பவை அல்ல. வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் அவ்­வாறு இழுத்­த­டித்­துக்­கொண்டு இருக்க முடி­யாது. 

நீங்கள் வாழ்க்கை குறித்து நிறைய திட்­ட­மி­டு­ப­வரா? 
இது­வரை திட்­டங்கள் ஏது­மின்­றியே நிறைய விட­யங்கள் நடந்­துள்­ளன. எனினும் இறை­வனின் திட்­டத்­திற்கு ஏற்­பவே அவை நிகழ்ந்­துள்­ளன. நல்ல விட­யங்­களைச் செய்தால் முன்­னோக்கிச் செல்­வ­தற்­கான பாதை­யொன்று உரு­வாகும். 

மனி­தனின் முன்­னேற்­றத்தில் பெரிதும் தாக்கம் செலுத்­து­கின்ற காரணி என்ன? 
முதலில் மற்­ற­வர்­களை முன்­னேற்­று­கின்ற முறை பற்றிச் சிந்­தி­யுங்கள். சகல தொழில்­வாண்­மை­யா­ளர்­களும் சாதிக்­க­வில்லை. சாதித்த அனை­வரும் தொழில்­வாண்­மை­யா­ளர்­களும் அல்லர். சிறந்த குறிக்­கோ­ளுடன் வேலை­செய்­வதே முக்­கி­ய­மா­ன­தாகும். அந்தக் குறிக்­கோ­ளினுள் மற்­ற­வர்­களை முன்­னேற்­றி­வி­டு­கின்ற செயற்­றிட்டம் ஒன்றும் இருக்க வேண்டும். அதே­போன்று வாழ்க்­கைக்கு எவ்­வித பெறு­மா­னத்­தையும் வழங்­காத நபர்­க­ளி­ட­மி­ருந்து வில­கி­யி­ருப்­பதும் முக்­கி­ய­மாகும். சிறந்த மனி­தர்­க­ளுடன் பழ­கு­வதும், வாழ்க்­கையில் நல்ல விட­யங்­களை இணைத்துக் கொள்­வதும் முக்­கி­ய­மா­ன­வை­யாகும். 

பெஷன் உல­கத்தில் நிலவும் போட்­டி­யா­னது உங்­க­ளுக்கு சவா­லான ஒன்றா? 
என்னைப் போன்றே ஏனை­ய­வர்­களும் வாழ வேண்டும். ஆனால் சம­மான வர்த்­தக நட­வ­டிக்கை ஒன்றில் மாற்­ற­மொன்றை, புது­மை­யொன்றை வழங்­கு­வ­தற்கு என்னால் முடி­யு­மாயின் அந்த இடத்­தில்தான் நான் வெற்­றி­யா­ள­னா­கின்றேன். நான் அத்­த­கைய போட்­டியை விரும்­பு­கின்றேன். ஏனெனில், அப்­போ­துதான் எனக்கு மென்­மேலும் புதிய விட­யங்கள் குறித்துச் சிந்­திப்­ப­தற்­கான சிறந்த தூண்­டுதல் ஏற்­படும். ஆடை­ய­ணி­க­லன்­களில் மட்­டு­மன்றி வீட்டு வாசல், சமை­ய­லறை, வர­வேற்­பறை, படுக்­கை­யறை என சகல இடங்­களும் எனக்கு பெஷன். வாழ்க்­கையை வடி­வ­மைக்­கின்ற, அதனை வர்­ண­ம­ய­மாக்­கு­கின்ற, எவ்­வ­ளவோ விட­யங்கள் இருக்­கின்­றன. 

நீங்கள் முத­லா­வ­தாகச் செய்த தொழில் என்ன?
பாட­சா­லையில் இருந்து வில­கி­ய­வு­ட­னேயே லங்கா ஒபரோய் ஹோட்­டலில் House Keeping  பிரிவில் தொழி­லொன்றை நானே தேடிக்­கொண்டேன். நான் அங்கு விறாந்­தையை சுத்­தப்­ப­டுத்­தினேன். அறை­களை ஒழுங்­கு­ப­டுத்தி அவற்றைப் பெருக்கிச் சுத்­தப்­ப­டுத்­தினேன். பக­லிலும் வேலை, இர­விலும் வேலை, எனது தொழிலை நான் மிகவும் மதித்தேன். இயன்­ற­வரை சிறப்­பாக வேலை செய்தேன். அது தொந்­த­ரவு என்றோ தாழ்­வா­ன­தென்றோ நான் ஒரு­போதும் நினைக்­க­வில்லை. சவூ­தியில் இருந்த பத்து வரு­டங்­க­ளிலும் அவ்­வா­றுதான்.

இன்று அந்த கடந்­த­காலம் ஞாப­கத்­திற்கு வரு­கின்­ற­போது என்ன நினைக்­கின்­றீர்கள்?
ஹோட்டல் அறையைப் பெருக்கிச் சுத்­தப்­ப­டுத்­திய ஒரு சிறிய பைய­னுக்கு இந்த நாட்டின் இளைஞர் யுவ­தி­க­ளுக்கு தொழில்­வாய்ப்­புக்­களை வழங்­கக்­கூ­டிய பாரிய கம்­ப­னி­யொன்றை உரு­வாக்க முடி­யு­மாயின், இன்­றைய சந்­த­தி­யி­ன­ருக்கு எவ்­வ­ளவு விட­யங்­களைச் சாதிக்க முடியும். சரி­யான பாதை­யொன்றைத் தேர்ந்­தெ­டுத்து, அதில் அர்ப்­ப­ணிப்­புடன் பய­ணிப்­பதே அவ­சி­ய­மாகும். தாய் தந்தை இல்­லை­யெனில் ஏனைய முதி­ய­வர்­க­ளா­வது அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு வழி­காட்­டுங்கள். அத­னையே நான் நினைக்­கின்றேன். 

பத்து வருட காலம் நீங்கள் சவூ­தியில் என்ன செய்­தீர்கள்? 
அது “camp operation…” நிறு­வ­ன­மொன்­றாகும். நான் சுத்­தி­க­ரிப்­பாளர் ஒரு­வ­ராகத் தொழிலை ஆரம்­பித்தேன். சம்­பளம் 950 ரூபா. எழு­து­வி­னைஞர், மேற்­பார்­வை­யாளர், முகா­மை­யாளர். என படிப்­ப­டி­யாக முன்­னேறி, செயற்­றிட்ட முகா­மை­யாளர் என்ற உயர் பதவி வரை சென்றேன். சகல வழி­ந­டத்தற் செயற்­பா­டு­களும் என்­னி­டமே ஒப்­ப­டைக்­கப்­பட்­டன. 1500 பணி­யாட் ­தொ­கு­தி­யி­னரை நிரு­வ­கித்தேன். நிரு­வாகம் மற்றும் இடர் முகா­மைத்­துவம் தொடர்­பான சிறந்த அனு­ப­வங்­களை நான் அந்தத் தொழி­லின்­போதே பெற்­றுக்­கொண்டேன். 

அத்­த­கைய சிறந்த தொழிலை விட்­டு­விட்டு நீங்கள் ஏன் இலங்­கைக்கு வந்­தீர்கள்? 
எனக்கே உரிய ஒன்றைச் செய்­வ­தற்கு. சில­வேளை எனக்­குள்­ளேயே தொந்­த­ரவு தரு­கின்ற பெஷன் பற்­றிய ஆர்­வத்தின் தூண்­டு­த­லா­கவும் அது இருக்­கலாம். நான் இலங்­கைக்கு வந்து எனது தந்தை முன்னர் தொழில் புரிந்த பது­ளையில் துணிக்­கடை ஒன்றை ஆரம்­பித்தேன். தந்­தைக்கு மட்­டக்­க­ளப்பில் துணிக்­கடை ஒன்று இருந்­த­மையால் எனக்கு இதனைச் செய்­வ­தற்குத் தோன்­றி­யது. எனினும் ஆறு வரு­டங்­களின் பின்னர் நான் அந்த வியா­பா­ரத்தை நிறுத்­தி­விட்டேன். 

5 comments:

  1. "இறைவன் கொடுத்தான், அவனே எடுத்துக்கொண்டான்". நம்பிக்கை கொண்டவனின் வாயில் இருந்து வரும் உயரிய வசனம். எல்லாம் வல்ல அல்லாஹ்வே! அவருக்கும் அன்னாரின் குடும்பத்தாருக்கும் பணியாளர்களுக்கும் எங்களுக்கும் உனது உறுதியான ஈமானின் சுவையை ருசிக்கத்தருவாயாக! எங்கள் தொழில்களில் பரகத் செய்வாயாக! ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்!

    ReplyDelete
  2. Mr.Mubarack is kown to me since his childhood he was a good athlete and a fine rugger player during his school days. he is a person always looking for innovative ideas even during school days. His perseverance and passion for his work and unshakable belief in his faith coupled with the blessing of the almighty made him to achieve heights in what ever venture he was involved. He is always willing to share a portion of his wealth with the needy people and institutions. His gesture was accepted by the almighty who gave him all what he has achieved in his life. i pray to almighty to give him his guidance and correct direction in all his future en devour.

    ReplyDelete
  3. I don't know him, but I heard about him through my friends. I wish you for your business sir.

    ReplyDelete

Powered by Blogger.