பாராளுமன்றத்திற்கு 'டோர்ச் லைட்' கொண்டுவந்த Mp யால் சலசலப்பு
அடிக்கடி ஏற்படும் மின்சாரத் துண்டிப்புக்கு தீர்வாக நாட்டிலுள்ள சகலருக்கும் அரசாங்கம் 'டோர்ச் லைட்'களை பெற்றுக்கொடுக்குமாறு கோரி ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடி நேற்று (23) பாராளுமன்றத்தில் டோர்ச் லைட்டுடன் வந்து சபையில் ஒளிரவைத்தார்.
இதனால் சபையில் சில நிமிடநேரம் சலசலப்பு ஏற்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி தொடர்பில் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நேற்று (23)பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை முன்வைத்து உரையாற்றினார்.
அமைச்சரின் உரையைத் தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய சிசிர ஜயக்கொடி எம்பி தனது கையிலிருந்து 'டோர்ச் லைட்டை ஒளிரவைத்துக் காண்பித்து, இதுபோன்ற டோர்ச் லைட்களை நாட்டிலுள்ள சகலருக்கும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் மின்துண்டிப்பால் ஏற்படும் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றார்.
இதன்போது குறுக்கீடு செய்த சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்றத்தினும் டோர்ச் லைட்டை ஒளிரவைக்க வேண்டாம் எனவும், அதற்கான தேவை ஏற்படவில்லையெனவும் குறிப்பிட்டார்.
Post a Comment