"ஷரீஆ வங்கி" - ரணிலுடன் கலந்துரையாடிய பின், ஜனாதிபதிக்கு அறிக்கை - MIM. ரபீக்
பொதுபலசேனாவின் கோரிக்கையை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய கொள்கை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம்.ஐ.எம். ரபீக்கிடம் ஷரீஆ வங்கி முறையின் ஸ்தாபிம் தொடர்பில் அறிக்கையொன்றினைக் கோரியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியதன் பின்பே ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எம்.ஐ.எம். ரபீக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2
இலங்கையில் ஷரீஆ வங்கி முறை சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்டதாகும். மத்திய வங்கி இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டதன் பின்பே இவ்வங்கி முறைமை நாட்டில் அமுலிலுள்ளது.
இதனை பொதுபலசேனா அமைப்பினால் சவாலுக்குட்படுத்த முடியாது என மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
பொதுபலசேனா சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ள ஷரீஆ வங்கி முறையில் கைவைக்க முடியாது. பாராளுமன்ற சட்டமொன்றின் மூலம் நடைமுறையிலுள்ள ஷரீஆ வங்கி முறையை இல்லாமற் செய்யக் கோருவது கேலிக்குரியதாகும். பொதுபலசேனா அமைப்பின் கோரிக்கையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஜனாதிபதி பிரதமர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் இவ்விகாரம் தொடர்பில் பொதுபலசேனாவுக்கு உரிய தெளிவுகளை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
பொது பல சேனாவின் திட்டங்கள் அனைத்தும் நாட்டை முன்னேற்றம் அடைய செய்யும் திட்டங்களாக காணப்படவில்லை ,இதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
ReplyDelete