மலேசியன் ஏர்லைன்ஸ் விமான பாகங்கள், ஆப்பிரிக்காவில் கண்டுபிடிப்பு - அமெரிக்கா
மலேசியாவின் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான MH370 விமானத்தின் பாகங்கள் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் 8-ம் திகதி 239 பயணிகளுடன் மலேசியாவிலிருந்து பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் எம்.எச்.370 ராடாரிலிருந்து திடீரென மறைந்தது.
அதன் பின்னர், அந்த விமானம் இந்தியப்பெருங்கடலில் விழுந்துவிட்டது என்றும் அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் உயிரிந்துவிட்டதாக மலேசிய பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதன் பின்னர், அதன் பாகங்களை தேடும் பணி இன்றுவரை தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், ஆப்பிரிக்காவின் Mozambique என்ற கடற்கரை பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த பாகங்களை ஆராய்ச்சிக்காக மலேசியாவிற்கு அனுப்பி வைத்துள்ள அமெரிக்க அதிகாரிகள், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாகம் போயிங் 777 ரக விமானத்தை சேர்ந்தது என்பதால், இது MH370 விமானத்தின் பாகங்களாக இருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment