Header Ads



இஸ்லாம் பற்றி தவறான பிரசாரம்செய்து, முஸ்லிம்களை வன்முறைக்கு திருப்ப IS முயற்சி


இஸ்லாமிய தேச பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அமெரிக்கவில் உள்ள முஸ்லிம்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறினார்.

 நாட்டு மக்களுக்கு வியாழக்கிழமை நிகழ்த்திய வானொலி உரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:

 இஸ்லாமைப் பற்றிய தவறான பிரசாரத்தை நிகழ்த்தி முஸ்லிம் இளைஞர்களை வன்முறைப் பாதைக்குத் திருப்ப ஐ.ஸ். பயங்கரவாத இயக்கம் முயற்சிக்கிறது.

 வன்முறையையும் வெறுப்பையும் தூண்டும் இஸ்லாமிய தேசத்தை ஒழிப்பதே நமது லட்சியம். ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போரில் அமெரிக்க முஸ்லிம்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

 அவர்களை வேறுபடுத்திப் பார்ப்பது அமெரிக்கப் பண்பாட்டுக்கு எதிரானது. மேலும் இது எதிர் விளைவையே ஏற்படுத்தும். நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தி நமக்குள்ளே சண்டை மூள வைக்கும். அதைத்தான் பயங்கரவாதிகள் விரும்புகிறார்கள்.

 ஐ.எஸ்.ûஸ ஒழிப்பது நமது பிரதான லட்சியம். அதில் நாம் வெல்வோம். பயங்கரவாதிகள் வீழ்வது உறுதி. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நாம் உறுதியாக உள்ளோம் என்றார்.

 ஐரோப்பாவில் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வரும் பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து, அமெரிக்க வாழ் முஸ்லிம்களைக் கண்காணிக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வில் போட்டியிடும் டெட் குரூஸ் கருத்து தெரிவித்திருந்தார்.

 முன்னதாக, சிரியா, இராக் அகதிகளுக்கு அமெரிக்காவில் புகலிடம் அளிக்கக் கூடாது என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.  இந்த நிலையில், அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஒபாமாவின் வானொலி உரை அமைந்ததாகக் கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.