Header Ads



IS தீவிரவாதிகளின் பிடியில் 31 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள்

சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை பிடித்து இஸ்லாமிய அரசாக அறிவித்துள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நடைமுறைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து குவில்லியம் அறக்கட்டளை 6 மாதங்களாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஈராக்கின் மொசுல் நகரில் தீவிரவாதிகள் 8 வயது சிறுமியை கடத்தி வந்து ஒரு கட்டிடத்தின் ஹாலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வலியால் துடிக்கும் அந்த சிறுமி அலறியதை பிற சிறுமிகளை கட்டாயப்படுத்தி கேட்க வைத்துள்ளனர்.

ஐஎஸ்ஐஸ் தீவிரவாதிகள் என்னை மூன்று நாட்களாக ஒரு அறையில் அடைத்து வைத்து தினமும் மூன்று முறை பலாத்காரம் செய்தனர் என்று அவர்களின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ள பெண் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் சிறுமிகள், பெண்களை தொடர்ந்து பலாத்காரம் செய்வார்கள். சில நாட்கள் கழித்து அந்த சிறுமிகள், பெண்கள் உடலில் சக்தி இல்லாமல் நடை பிணம் போன்று காணப்படுவார்கள் என்கிறார் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பெண்களில் 31 ஆயிரம் பேர் தற்போது கர்ப்பமாக உள்ளனர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே பயிற்சி அளித்து ஒரு ராணுவத்தையே உருவாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.