"HIV வதந்தி" மாணவனை ஆரத்தழுவிய ரஞ்சன், தொலைபேசியில் பேசிய மைத்திரி (வீடியோ)
குளியாப்பிட்டியில் எயிட்ஸ் நோய் குற்றச்சாட்டில் பாடசாலையை விட்டு நீக்கப்பட்ட சிறுவனை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
பிரதேச வாசிகளுக்கு எயிட்ஸ் தொடர்பான தெளிவினை வழங்க பிரதிமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அங்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதுடன், பலரின் விமர்சனத்திற்கு மத்தியில் விரக்தியில் வாழும் அக்குடும்பத்திற்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தேவையற்ற பயம் காரணமாக அப்பாவி மாணவன் ஒருவரின் கல்வியை தடுக்க வேண்டாம் என பிரதிமைச்சர் அப்பிரதேச மக்களை வேண்டிக் கொண்டார்.
அத்துடன் எயிட்ஸ் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு எதுவும் இல்லை.. அவருடன் எல்லோரும் வழமை போல் பழகும்படி கூறி, பிரதிமைச்சர் ரஞ்சன் அச்சிறுவனை தன்னுடன் அணைத்துக் கொண்டது பலருக்கும் நெகிழ்ச்சியை வரவழைத்தது.
இலங்கை அநேகான பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ள நிலையில், குறிப்பாக சிங்கள பிரதேசத்தில் ரஞ்சன் ராமநாயக்கா போன்றவர்களின் செயற்பாடுகளே நிம்மதியைத் தருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2..................
AIDS நோய் தொற்றியுள்ளதாக போலி பிரச்சாரம் மேற்கொண்டதன் காரணமாக பாடசாலையை இழக்க நேரிட்ட சிறுவனின் தாயராருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளார்.
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று குளியாப்பிட்டிய பிரதேசத்திற்கு சென்று, சிறுவன் மற்றும் அவரது தாயாரை சந்தித்த சந்தர்ப்பத்தில் தனது தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி ஜனாதிபதியிடம் கொடுத்துள்ளார்.
இதன்போது சிறுவனின் தாயார் தனது மகனுக்கு பாடசாலை ஒன்றினை பெற்று தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த குடும்பத்திற்கு எந்தவொரு தொந்தரவுகளும் ஏற்படுவதற்கு தான் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாடசாலையில் அனுமதியை பெற்று தருவதாக சிலர் வாக்குறுதி அளித்தாலும், தற்போது வரையில் உறுதியாகவில்லை என சிறுவனின் தாயார் கூறியுள்ளார்.
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆரம்பத்தில் இருந்தே இந்த சிறுவனின் சம்பவம் தொடர்பில் தலையிட்டு வருகிறார். இதற்கு முன்னரும் இவரது தலையீட்டு காரணமாக சிறுவனுக்கு பாடசாலை ஒன்றில் அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Ranjan is really kind hearted and great
ReplyDelete