"HIV வதந்தி" சிறுவனின் குருதியை எனது உடலில் ஏற்றிக்கொள்ள தயார் - ரஞ்சன்
கடந்த சில தினங்களாக பெரும்பாலும் பேசப்பட்டு வரும் அநீதிக்கு உள்ளான குளியாப்பிட்டி சிறுவன் சம்பந்தமாகவும் எயிட்ஸ் நோய் தொடர்பாக மக்களுக்கு மாத்திரமல்லாது, அரசியல்வாதிகளின் மனங்களில் இருக்கும் தவறான எண்ணத்தை போக்க தான் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டி சிறுவனுக்கு எயிட்ஸ் நோய் இல்லை என்பதை காட்ட, சிறுவனிடம் இருந்து எடுக்கப்பட்ட குருதியை தான் தனது உடலில் செலுத்திக்கொள்ள போவதாகவும் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் எத்தனை பேருக்கு எயிட்ஸ் நோய் இருக்கின்றதோ என்பது யாருக்கும் தெரியாது. அப்படி எவராது கண்டுபிடிக்கப்பட்டால், நாடாளுமன்றத்தில் இருந்து விரட்டி விடுவார்களாக எனவும் பிரதியமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்படியான மாயைகளுக்கு ஏமாற முடியாது. எயிட்ஸ் நோய் காற்று மற்றும் எச்சில் மூலம் பரவாது. அது பற்றி நான் படித்திருக்கின்றேன்.
குறித்த சிறுவனுக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறந்த பாடசாலையில் கற்கும் வாய்ப்பு சிறுவனுக்கு வழங்கப்படும் எனவும் அவரது தாய்க்கு வீடு ஒன்றும் வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதிலும் அரசியல் வெட்கம் கெட்ட அரசியல். இவர்களுக்கு அல்லாஹ் மானம் என்பதை இல்லாமலாக்கியுள்ளானோ? எந்தளவுக்கு கேவலமாக நடக்க முடியுமோ அந்தளவிற்கு கேவலமாக நடந்து கொள்பவர்கள்தான் இந்த அரசியல்வாதிகள் . பொய் , பித்தலாட்டங்கள், கொடுத்த வாக்கை காப்பாற்றாமை இப்படி எல்லா விடயங்களையும் பதிவி கிடைக்க வேணும் என்பதற்காக செய்வார்கள்.
ReplyDelete