Header Ads



HIV வதந்தி: குளியாப்பிட்டிய சிறுவன், பாடசாலையிலிருந்து நீக்கம்

இலங்கையில் வடமேல் மாகாணத்தில் குளியாபிட்டிய என்ற இடத்தில், எச்ஐவி தொற்றுக்கு உள்ளானவர் என்ற வதந்திக்கு உள்ளான 6 வயது சிறுவனை அண்மையில் சேர்த்துக் கொண்டிருந்த பள்ளிக்கூடம் இப்போது அவரை நீக்கியுள்ளது.

அந்தச் சிறுவனின் தந்தை எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக உள்ளூரில் வதந்தி பரவியிருந்த நிலையில், அவரை சேர்த்துக்கொள்ள எந்தப் பள்ளிக்கூடமும் முன்வந்திருக்காத நிலையில், கல்வி அதிகாரிகளின் தலையீட்டால் பள்ளிக்கூடம் ஒன்று அவரை அண்மையில் சேர்த்திருந்தது.

உள்ளூர் மக்களிடமிருந்து தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் எதிர்ப்புக்கு மத்தியில், அவரை அந்தப் பள்ளியிலிருந்து விலக்கியுள்ளதாக வட-மேற்கு மாகாண சபை கல்வி அமைச்சர் சந்தியா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்த சிறுவன் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு தங்களின் பிள்ளைகளை அனுப்பமுடியாது என்று ஏனைய பெற்றோர் மறுத்திருந்த நிலையில், பள்ளிக்கூடத்தை சில நாட்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், ஏனைய பிள்ளைகளின் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அந்தப் பள்ளிக்கூடத்தில் வைத்திருப்பது அந்த சிறுவனுக்கு பாதமான நிலைமையை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலேயே அந்த சிறுவனை அங்கிருந்து விலக்க நடவடிக்கை எடுத்ததாக மாகாண கல்வி அமைச்சர் சந்தியா ராஜபக்ஷ பிபிசியிடம் தெரிவித்தார்.

சிறுவனின் அடையாள ஆவணங்களை மாற்றி, எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் வேறு பள்ளிக்கூடம் ஒன்றில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் சந்தியா ராஜபக்ஷ கூறியுள்ளார்.

மகனுக்கு 6 வயதாகியும் எந்தப் பள்ளிக்கூடமும் முன்னர் சேர்க்க சம்மதித்திருக்காத நிலையில் நியாயம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவனது தாயார், தனது மகனுக்கு எச்ஐவி தொற்று இல்லை என்பதையும் மருத்துவ சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்.

அதனையடுத்தே, கல்வி அமைச்சின் அதிகாரிகளினால் குளியாப்பிட்டியிலுள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் சிறுவனை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது.

பள்ளிக்கூடம் சில நாட்கள் மூடப்பட்டிருந்ததால், பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்காக பள்ளி நிர்வாகம் மாகாண கல்வி அமைச்சின் உதவியை நாடியது.

பள்ளி நிர்வாகத்தினருக்கும் மாகாண கல்வி அமைச்சருக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் இடையில் இன்று -02- நடந்த பேச்சுவார்த்தையின்போது, சிறுவனுக்கு எச்ஐவி தொற்று இல்லை என்று சுகாதார அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

ஆனாலும், அதை ஏற்க மறுத்த பெற்றோர் சிறுவனை தொடர்ந்தும் பள்ளிக்கூடத்தில் வைத்திருப்பதற்கு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

பெற்றோரிடமிருந்து வந்த தொடர் எதிர்ப்பை அடுத்து, சிறுவனை பள்ளியிலிருந்து விலக்கிக்கொள்வதாக மாகாண கல்வி அமைச்சர் அறிவித்தார்.

ஆனால், அமைச்சரின் இந்த முடிவுக்கு அப்பகுதி சுகாதார அதிகாரிகளும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்ததாக அங்கிருந்த பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், சிறுவனுக்கு வேறொரு பள்ளிக்கூடத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக மாகாண கல்வி அமைச்சர் சந்தியா ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

இந்த சிறுவனுக்கு எச்ஐவி இல்லை என தேசிய பாலியல் தொற்று மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவின் விசேட நிபுணர் டாக்டர் ஜி.வீரசிங்க பிபிசியிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. Stupid people are playing with the life of innocent lad

    ReplyDelete
  2. இது மிகவும் மோசமான செயல் இந்த மாணவனின் எதிர் காலத்தையும் அவனுடைய மனம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை இந்த பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும் ,இதில் நிறைய நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது தப்பான பாலியல் தொடர்பை விரும்புகின்றவர்கள் நம் பிள்ளைகள் எவ்வளவு பாதிப்புகளையும் மன உழைச்சலுக்கு ஆளாகி விடுவதையும் சிந்திக்க வேண்டும் இவ்வாறு சமுதாயத்தில் இருந்து ஒதுக்கப்படும்போது தற்கொலை முயற்சியில் ஈடுபடவும் வாய்ப்பு உண்டு,இவ்வாறான காரணமாகத்தான் இஸ்லாம் விபச்சாரத்தை வண்மையாக கண்டிக்கிறது,

    ReplyDelete
  3. Ithu mihap periya thawaru.
    Ich siruvanin kalvikku mehappearum sawal.udanadiyaha ithaddku theervu kidaikka veandum.
    We ready to revolution...

    ReplyDelete
  4. அப்பட்டமான மனித உரிமை மீறல் இது!

    எயிட்ஸ் நோய் இருந்தால் கூட அது தொடுகை, நுளம்புக்கடி மூலம் பரவுதே கிடையாது. அப்படியிருக்க நோயே இல்லாத சிறுவனை வெறும் யூகத்தின் அடிப்படையில் வெறுப்பது கொடுமை!

    ReplyDelete
  5. GOD IS GREAT ,, IF ITS HAPPENED IN A MUSLIM SCHOOL Jesslya Jessly
    will tell many things.

    ReplyDelete
  6. முஸ்லீம் பாடசாலையில் இது இடம்பெற்றாலும் எயிட்ஸ் தொடுகையினாலோ நுளம்பினாலோ பரவுவதில்லை எனும் உண்மை மாறாது. நோய் இல்லையென்று உறுதிப்படுத்திய மருத்துவ அறிக்கையும் திடீரென மாற்றமடையாது.

    சார்ந்திருக்கும் இனத்திற்கேற்ப உடற்கூற்றியல் நிபந்தனைகள் மாற்றமடையாது. ஆதலால் அது பற்றிக் கூறப்படும் கருத்துகளும் மாற்றமடையாது. இந்த நிதர்சனம் புரியாத பா. சகாவின் மடமையும் மாற்றமடையாது.

    ReplyDelete

Powered by Blogger.