ராஜபக்ஸாக்களின் சகல File களும் மைத்திரியிடம், வெளிப்படுத்தினால் வாழமுடியாது என எச்சரிக்கை
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி, கட்சியின் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் மஹிந்த தரப்பினர் தீவிரமான செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கட்சியை பிளவுபடுத்தினால் பாரிய பின்விளைவுகளை ராஜபக்சர்கள் சந்திக்க நேரிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த மஹிந்த ஆட்சியில் தான் எவ்வாறு நடத்தப்பட்டார் என்பது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
“உண்மையாக கூறினால் நான் கட்சியை விட்டு செல்வதற்கு பாதையை அமைத்தது ராஜபக்சர்கள் எனினும் நான் அவர்களுக்கு எதிராக நான் ஒன்றும் செய்யவில்லை.
எனினும் மஹிந்த கட்சியை உருவாக்கி சுதந்திர கட்சியை பிளவுபடுத்தினால் என்னிடம் இருந்து விடுதலை கிடையாது. என்னிடம் அவர்கள் தொடர்பிலான அனைத்து தகவல்களும் உள்ளன.
ஆரம்பத்தில் இருந்து அனைத்தையும் வெளியே எடுப்பேன். அதன் பின்னர் மக்கள் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்வர். அதன் பின்னர் ராஜபக்ஷர்களினால் இந்த நாட்டில் வாழ முடியாது
எனினும், நாட்டு மக்கள் மற்றும் எங்கள் கட்சிகாரர்கள் மஹிந்தவிடமே உள்ளனர். மஹிந்தவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தொல்லை கொடுப்பதனை மக்கள் விரும்பவில்லை. எங்கள் கட்சிகாரர்களும் விரும்பவில்லை.
உங்களால் தலையிட்டு இதனை நிறுத்த முடியாதா?” என மொரிஸ் என்ற உறுப்பினர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
“அதனை என்னால் மேற்கொள்ள முடிந்த விடயம் அல்ல. அதனை பிரதமர் உட்பட குழுவினர் பார்த்து கொள்வார்கள் என்னால் முடியாது” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் தற்போது பெரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளோம். நாங்களும் இந்த கட்சி பிளவுபடுவதனை விரும்பவில்லை. எனினும் கிராமங்களில் மக்கள் மஹிந்தவுக்கு ஆதரவாகவே உள்ளனர். நாங்களும் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் கிராமங்களில் எங்களுக்கு அரசியல் செய்ய முடியாமல் போய்விடும். 17ஆம் திகதி இடம்பெறும் பேரணிக்கு நிச்சியமாக நாங்கள் செல்ல வேண்டும். எங்கள் நிலைமையை புரிந்து கொள்ளுமாறு” ஜனாதிபதியிடம் ஜகன வெலிவத்தை தெரிவித்துள்ளார்.
“ஆம்... ஆம் நீங்கள் கூறும் அனைத்து விடயங்களும் எனக்கு தெரியும்... எனினும் நீங்களும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று உள்ளது. நான் இன்னும் 5 வருடங்களுக்கு மாத்திரமே அரசியலில் ஈடுபடுவேன். எனக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. எனினும் நீங்கள் தொடர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும். நீங்கள் மஹிந்தவுடன் சென்றால் மஹிந்த விழும் குழியிலேயே நீங்களும் விழுந்து விடுவீர்கள். என்னுடன் செயற்பட்டால் கட்சியில் எதிர்காலம் உங்களுக்கு உண்டு. அதனை தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..... என மைத்திரி மிகவும் கடுமையாக தெரிவித்துள்ளார்.
கிராமங்களில் மஹிந்தவின் புகழ் எவ்வாறு என்பதனையும் மைத்திரியின் புகழ் எவ்வாறு என்பதனையும் மெரில் பெரேரா என்பவர் இதனை போது விபரித்துள்ளார்.
எனினும் மைத்திரி உறுதியாக இருந்தார். செல்ல நினைப்பவர்கள் 17ஆம் திகதி செல்லுங்கள் என கூறிவிட்டு ஒரு மணித்தியாளத்தில் ஜனாதிபதி இந்த கலந்துரையாடலை நிறைவு செய்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் காற்று பலமாக அடிக்கும் வாய்ப்பு அதிகம் தென்படுகின்றது.அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான்.
ReplyDeleteஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் காற்று பலமாக அடிக்கும் வாய்ப்பு அதிகம் தென்படுகின்றது.அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான்.
ReplyDelete