Header Ads



கோடீஸ்வர பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில், CID விசாரணை ஆரம்பம்

இலங்கையில் திடீரென கோடீஸ்வரர்களாகிய பொலிஸ் அதிகாரிகள் பலர் தொடர்பில் பாதுகாப்பு புலனாய்வு பிரவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவர்களில் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சிலரும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள ஒரு அதிகாரியிடம்,  03 ஆடம்பர வீடுகள் மற்றும் அதி சொகுசு மோட்டார் வாகனங்கள் இரண்டிற்கு உரிமையாளராகியுள்ளதாக பொலிஸ் அதிரடிப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெலே சுதா எனப்படும் போதைப்பொருள் வியாபாரியுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்ட ஒருவர் அவர்களுக்குள் உள்ளதாக விசேட அதிரடிப்படை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டும் பௌர்னமி தினத்தன்று விசேட அதிரடிப்படையினர் 85 கிலோ ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றினர். அந்த போதைபொருட்கள் வெலே சுதாவிற்கு சொந்தமானதெனவும், பல காலங்களாக மேற்கொண்ட விசாரணைகளின் பிரதிபலனாக ஹெரோய்ன் போதைப்பொருளை கைப்பற்றியதாக பொலிஸ் அதிரடிப்படையினர் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

வெலே சுதா என்ற போதைப்பொருள் வியாபாரியை பாகிஸ்தானில் வைத்து கைது செய்து இந்த நாட்டிற்கு அழைத்து வந்ததன் பின்னர் தன்னுடன் தொடர்பு வைத்திருந்ததோடு, மாதாந்தம் இவரிடம் சம்பளம் பெற்றுகொள்ளும் பொலிஸ் அதிகாரி தொடர்பில் விசேட தகவல்கள் வெளியாகின.

பௌர்ணமி தினத்தன்று கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் 85 கிலோ தன்னுடையதல்ல எனவும், அது சிந்திக் என்ற வியாபாரிக்கு சொந்தமானதென வெலே சுதா இதன் போது குறிப்பிட்டார். அத்துடன் 105 கிலோ போதைப்பொருள் அதில் இருந்ததாக வெலே சுதா கூறினார்.

அதற்கமைய காணாமல் போன போதைப்பொருள் தொடர்பில் விசேட பொலிஸ் விசாரணை ஒன்று செயற்படுத்தப்பட்டது. கையின் கீழ் இடம்பெற்ற போதைப்பொருள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தகவல் வெளியாகியதாக பொலிஸார் தகவல் வெளியிட்டனர்.

அந்த விசாரணைகள் பின்னர் இடையில் நடுவே நிறுத்தப்பட்டது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சிறப்பு பெயருக்கு அது அச்சுறுத்தல் என கூறி விசாரணைகளை இடைநிறுத்துவதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு கடுமையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் அண்மையில் விடுதலை புலிகளுக்கு சொந்தமான ஆயுதங்களை பாதாள உலக குழுவினருக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.