"கலந்து கொள்வார்கள்"
-ARA.Fareel-
பாலமுனையில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் தாம் நிச்சயம் கலந்துகொள்ள விருப்பதாக கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலியும், தவிசாளர் பசீர் சேகுதாவூதும் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் விவகாரத்தில் கட்சியின் செயலாளரும், தவிசாளரும் கட்சித்தலைமைத்துவத்துடனான உறவில் விரிசலைக் கொண்டுள்ள நிலையில் இருவரும் தேசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்குத் தீர்மானித்துள்ளனர்.
நடைபெறவுள்ள கட்சியின் தேசிய மாநாடு கொள்கை உறுதிப்பாட்டினைக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையுடனே மாநாட்டில் நான் கலந்து கொள்ளவுள்ளேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவுத் தெரிவித்தார்.
இதேவேளை கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசன் அலி தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதனால் நான் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளேன் என்று தெரிவித்தார்.
Post a Comment