Header Ads



வெடிபொருட்கள் மீட்பு, அரசாங்கமே பொறுப்பு - நாமல்

சாவகச்சேரியில், வெடிபொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து, விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணைய முனைவதாக எதிர்க்கட்சிகள் கூச்சலிடத் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையத் தொடங்கியுள்ளதாகவும், தேசிய பாதுகாப்பின் வீழ்ச்சிக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும் வெடிபொருட்கள், வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்பட இருந்தவை என்றால், அது தொடர்பான உண்மைத் தன்மையை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

இந்தநிலையில், சீன செய்தி நிறுவனமான சின்ஹுவாவுக்கு பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, அளித்துள்ள செவ்வியில், வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஒன்றும் அதிமுக்கியமான விடயமல்ல என்றும், அது போர்க்காலத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளார்.

போர்க்காலத்தில், விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு வெடிபொருட்களை நாம் அடிக்கடி மீட்கிறோம். இதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற கேள்விக்கே இடமில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.