Header Ads



கொண்டையாவைத் தேடும் பொலிஸ்


கொட்டதெனியாவ சிறுமி சேயாவின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விடுதலையான கொண்டையா எனப்படும் துனேஸ் பிரியசாந்தவை கொட்டதெனியாவ பொலிசார் மீண்டும் வலைவீசித் தேட ஆரம்பித்துள்ளனர்.

கொட்டதெனிய பிரதேசத்தை அண்மித்த பதுகொடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவரின் தோட்டத்தினுள் அத்தமீறி நுழைந்து மாடு ஒன்றை துஸ்பிரயோகம் செய்ததாக கொண்டையாவுக்கு எதிராக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சுமார் ஒருமாதத்துக்கு முன்னதாக குறித்த கடற்படை அதிகாரியின் புதல்வி தூங்கும் அறையின் கூரை ஓடொன்று அகற்றப்பட்டிருந்ததாகவும், அதனை கொண்டையாவே செய்திருக்க வேண்டும் என்றும் அந்த  முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் தற்போது கொட்டதெனியாவ பொலிசார் கொண்டையாவை கைது செய்வதற்கு வலைவீசித் தேடத் தொடங்கியுள்ளனர்.

கொட்டதெனிய பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி சேயாவின் கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிசாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த கொண்டையா மற்றும் பாடசாலை மாணவனொருவன் பொலிசாரின் சித்திரவதைகளுக்கு ஆளாகியிருந்தனர்.

இதற்கு எதிராக அவர்கள் இருவரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், குறித்த மாணவன் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அண்மையில் மீண்டும் கைது செய்யப்பட்டிருந்தான்.

தற்போது கொண்டையாவுக்கு எதிராகவும் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டு, அவரும் தேடப்படும் நபராக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.