முஸ்லிம் காங்கிரஸின் மாநாட்டுக்கு, நேரடி அழைப்புவிடுக்கும் பணியில் ஹரீஸ்
(ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்)
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு நாளை சனிக்கிழமை 19ம் திகதி பாலமுனையில் நடைபெறவுள்ளதையிட்டு கல்முனை பிரதேச வர்த்தக சமூகத்தினர், கட்சி ஆதரவாளர்கள், போராளிகள், நலன் விரும்பிகளை மு.கா பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நேரடியாக சென்று அழைப்பு விடுக்கும் பணியில் நேற்று (17) வியாழக்கிழமை ஈடுபட்டார்.
இதில் பிரதித் தலைவருடன் கட்சியின் முக்கியஸ்தர்கள், இளைஞர் தொண்டர் அணியினர், கட்சிப் போராளிகள் என பலரும் கலந்து கொண்டு வர்த்தக நிலையங்கள் தோறும் நேரடியாக சென்று அழைப்பு விடுத்தனர். இதன்போது வர்த்தக சமூகத்தினர் பிரதித் தலைவர் ஹரீஸினை இன்முகத்துடன் வரவேற்றனர்.
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டினை முன்னிட்டு கல்முனை தொகுதியின் மருதமுனை, கல்முனை, சாய்;ந்தமருது ஆகிய பிரதேசங்களின் பிரதான வீதிக்கு குறுக்காக கொடிகள் கட்டும் வேலைகள், மாநாட்டுக்கான கட்அவுட்கள், தோரணங்கள் அமைத்தல் என பல்வேறு வேலைகளை பிரதித் தலைவர் ஹரீஸினால் முடிக்கிவிடப்பட்டுள்ளது. இதனால் கல்முனை பிரதேசத்தில் தேசிய மாநாட்டுக்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ளது.
ஹரீஸ் அவர்களே, நீங்கள் காட்டும் சோவில் கூட்டம் கூடுவதட்கு கல்முனை மக்கள் ஒன்றும் அரசியல் மந்தைகள் அல்ல. 1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1989 ஆம் ஆண்டு வரை அரசியல் அடையாளத்தை பெற்றுக் கொள்வதற்காக முயற்சித்துக் கொண்டிருந்த தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு அரசியல் அடையாளம் கொடுத்தவர்கள் இப்பிரதேசத்து மக்கள் என்பதை மறந்து விடாதீர்கள். பிரதி மந்திரி, பிரதி தலைவர் போன்ற பதவிகளில் மயங்கிக் கிடக்காமல், கட்சியிலும் அதன் தலைமையிலும், மூத்த போராளிகளும், மக்களும் (கட்சியின் அரசியல் முன்னெடுப்புக்களில்) மிகவும் அதிருப்தியில் உள்ளார்கள். அவைகளை இனம் கண்டு நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்துங்கள். இல்லா விட்டால், மகாநாட்டில் கூடும் மக்களை காட்டி, தங்களை வளப்படுத்திக் கொள்வார்கள் சுயநலக் கும்பல்கள். உங்களையும் சேர்த்துத்தான்.
ReplyDelete