Header Ads



லாகூர் பயங்கரவாத தாக்குதலை, வன்மையாக கண்டிக்கும் ஜனாதிபதி

அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து பாகிஸ்தானின் லாகூர் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தான் வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவர்களுக்கு அனுப்பி வைத்த விசேட செய்தியில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் குறிப்பிடுகையில், சோகமான இச்சந்தர்ப்பத்தில் இலங்கை அரசு பாகிஸ்தான் அரசாங்கத்துடனும் மக்களுடனும் ஒன்றிணைந்து சோகத்தில் பங்குகொள்வதாகத் தெரிவித்தார்.

தாக்குதலுக்கு இலக்கான குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்கு பிரார்த்தித்தார்.

தமது நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஆசியாவின் அரசாங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பாரிய பொறுப்பாகுமென ஜனாதிபதி அவர்கள் தனது செய்தியில் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

No comments

Powered by Blogger.