Header Ads



துருக்கிக்கு ஆதரவளிக்க மறுப்பது ஏன்..?


துருக்கியின் ஆங்காரா நகரில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலின் எதிரொலியாக பேஸ்புக் பதிவு ஒன்று வைரலாகியுள்ளது.

ஆங்காரா நகரில் குடியிருந்து வரும் ஜேம்ஸ் டைலர் என்பவர் அங்கு நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்து தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உணர்ச்சிமிக்க அந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறியுள்ளது.

நீங்கள் இருக்கும் நகரங்களில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்திருந்தால் என்னவாகும் என வாசகர்களை ஒருகணம் சிந்திக்க கோருகிறார்.

தினசரி நடந்து சென்ற பகுதி, அந்த சாலை வழியே பேருந்து பயணம், அந்த பகுதிகளில் இருந்து சாலையை கடந்தது,

இவை அனைத்தும் ஒரு நொடியில் சிதறடிக்கப்பட்டிருப்பதாக கூறும் அவர், இந்த வெடிகுண்டு தாக்குதல் பிரித்தானியாவின் மிகவும் நெரிசலான பகுதியில் நடப்பதற்கு ஒப்பாகும் என்றார்.

ஆங்காரா ஒன்றும் போர் சூழல் மிகுந்த பகுதியல்ல என கூறும் அவர், ஐரோப்பாவின் வேறு எந்த நகரை போலவும் ஆங்காராவும் ஒன்றே என்றுள்ளார்.

தீவிரவாத தாக்குதல் உலகின் முக்கிய நகரங்களில் நடைபெற்றால் மட்டுமே ஆதரவு தெரிவிப்பது என்பது எந்த வகையில் ஏற்றுக்கொள்ளக் கூடியது?

பாரிஸ், லண்டன், நியூயார்க் நகரங்களுக்காக பரிவு காட்டப்படும்போது ஏன் அதே உணர்வுகள் ஆங்காரா மீது காட்டப்படவில்லை?

பாரிஸ் நகர தாக்குதலின்போது உலகமே அவர்களுக்கு ஆதரவளித்ததே, அதே பார்வை ஆங்கரா மீது ஏன் திரும்பவில்லை?

பாரிஸ் போன்று ஆங்காராவும் ஒரு நகரம் என நீங்கள் உணர்ந்துகொள்ளாதது தான் காரணமா? என உணர்ச்சி பொங்க அந்த பதிவு கேள்வி எழுப்பியுள்ளது.

துருக்கி தலைநகரில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெறுவது இது முதன்முறையல்ல, கடந்த மாதம் ராணுவ வாகனத்தின் மீது குர்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த அக்டோபர் மாதம் அமைதிப் பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 103 பேர் படுகொலை செய்யப்பட்டனர், 250 பேர் படுகாயமடைந்தனர்.

1 comment:

  1. ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரங்கள் எதுவும் முஸ்லிம்களின் நாடுகளும் அல்ல அங்கு இறந்தவர்கள் முஸ்லிம்களும் அல்ல அதனால்தான் அங்கு குண்டு வெடித்த போது உலகமே தனது கவனத்தை அதன் மீது குவித்தது முஸ்லிம் நாடுகளும் உள்ளடங்கலாக.

    ஆனால் எந்த முஸ்லிம் நாட்டின் நகரங்களில் அணுகுண்டே வெடித்து அந்த நாடே அழிந்தாலும் முஸ்லிமல்லாத நாடுகள் (ஒரு சிலதைத் தவிர) கணக்கெடுப்பதில்லை (பல முஸ்லிம் நாடுகள் உட்பட) ஏனென்றால் அங்கு அழிவது முளிம்களும் அவர்களின் சொத்துக்க்களும்தானே அதற்கு எந்த மதிப்பும் இல்லை உலகின் பார்வையில்.

    ReplyDelete

Powered by Blogger.