Header Ads



தம்மாலோக தேரரை பார்வையிட, சிறைக்குச்சென்ற மஹிந்த ராஜபக்ஸ

யானைக் குட்டியொன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்ட அலன்மெதினியாராம விஹாராதிபதி தம்மாலோக தேரரை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பார்வையிடச் சென்றுள்ளார்.

மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மாலோக தேரரை மஹிந்த பார்வையிடச் சென்றுள்ளார்.

அரசாங்கம் அனைத்து தரப்பினரையும் அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாகவும் சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் சமூகத்தை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் பௌத்த பிக்குகள், விவசாயிகள், தொழிலாளிகள் என அனைத்து தரப்பினரையும் அரசாங்கம் அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தம்மாலோக தேரர் உள்ளிட்ட 48 பேர் வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காக இவ்வாறு அரசாங்கம் செய்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலை ஏற்றம், வரி அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை திசை திருப்ப முயற்சிக்கப்படுவதாகவும் இனி வரும் காலங்களில் அரசாங்க ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது எனவும் தெரிவித்த  மகிந்த தம்மாலோக தேரர் கைது செய்யப்பட்டமை கண்டிக்கப்பட வேண்டியது  எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.