Header Ads



சிலுவை யுத்தங்களால் முடியாமல் போனதை, சாதித்துவிட்ட நம்மவர்கள்..!

-Musthafa Ansar-

அவர்கள் சாதித்துவிட்டார்கள்!!

அவர்கள் சாதித்துவிட்டார்கள்!!

"சிலுவை யுத்தத்தால் சாதிக்க முடியாததை சிந்தனா யுத்தத்தால் சாதித்துவிட்டார்கள் யூத, நசாராக்கள்."

சிலுவை யுத்தம் கிறிஸ்தவ போர்வீரர்களால் மேற்கொள்ளப்பட்டது. சிந்தனா யுத்தம் ஏகத்துவம், குர்ஆன் ஹதீஸ், ஷரீஅத் போன்ற முகமூடிகளை அணிந்த முகவர்களால் மேற்கொள்ளப்படுகிறது.

அன்று சிலுவை யுத்த வீரர்களை ஒரே தலைமைத்துவத்தின் கீழ் ஒற்றுமையாக எதிர்கொண்டு இஸ்லாத்தின் கொடியின்கீழ் வெற்றிகொண்டவர்கள், இன்று பல சிந்தனை முகாம்களாகப் பிரிந்து தமக்குள் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் பழிதீர்க்கும் நிலைக்கு முன்னேறியிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் எதிரிகளை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக தமக்குள் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் கொலைசெய்வதை நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். அதை ஜிஹாத், வீரமரணம் என்றும் அழைத்துக்கொள்கிறார்கள். கொல்லப்படுபவரும், கொலைசெய்பவரும் தியாகிகள் என்று சொல்கிறார்கள்.

ஒருவரின் மானத்தை போக்குவதை சர்வசாதாரணமாகச் செய்கிறார்கள்.

தங்கள் கருத்துடன், தமது முகாமின் கொள்கையுடன் உடன்படாதவர்களை எதிரியாகப் பிரகடனப்படுத்தவும், காபிர் என்று பட்டம் சூட்டவும் அடித்துத் துன்புறுத்தவும் ஏன் கொலை செய்யவும் இவர்கள் தயங்குவதில்லை.

இவர்கள் ஒவ்வொருவரும் சத்தியத்துக்கு "ஏகத்துவம்" "தீன்" "இஸ்லாம்" என்று பல பெயர்களில் உரிமைகோருகிறார்கள். ஆனால் சத்தியம் அனாதையாக இருக்கிறது. சத்தியம் அசத்தியவாதிகளின் திட்டமிட்ட தாக்குதலுக்கு உட்பட்டிருக்கின்றது. ஆனால் இவர்களோ தமக்குள்ள சண்டையிட்டு தாம் சத்தியம் என்று சொல்வதை நிலைப்படுத்துவதற்காக போராடுகிறார்கள்.

அவர்கள் சாதித்துவிட்டார்கள்,

சிலுவை யுத்தங்களால் முடியாமல் போனதை சிந்தனா யுத்தத்தால் சாதித்துவிட்டார்கள்.

No comments

Powered by Blogger.