உடதலவின்னை ஈன்றெடுத்த, மர்ஹூம் புன்யாமீனுக்கு நினைவு அஞ்சலி
(கலாபூசணம் ஜே.எம்.ஹாபீஸ்)
ஆயிரம் முட்டைகள் இட்டு அமைதியடைந்த ஆமை போன்று அமைதியடைந்த ஒரு ஆத்மாதான் எழுத்தாளர் புன்யாமீன். ஆப்படியான ஒரு எழுத்தாளரும் கலைஞரும் ஊடகவியலாருமான ஓய்வு பெற்ற ஆசிரியருமான மர்ஹூம் புன்யாமீனுக்கு மலையக கலை கலாசார சங்கம் நடத்திய இரத்தினதீபம் விருது விழாவில் மரியாதை செலுத்தியது வரவேற்கத்ததக்கது.
சாதாரணமாக கிராம வழக்கில் வீடு ஒன்றைக் கட்டிப்பார். பிள்னை ஒன்றை வளர்த்துப்பார், புத்தகம் ஒன்றை வெளியிட்டுப் பார் என்பார்கள். இது ஒரு தனிப் புத்தகத்தை வெளியிடுபவர் நிலையை விபரிக்கும் ஒரு சின்ன உதாரணமாகும்.
ஆனால் நாடறிந்த எழுத்தாளர் புன்யாமீன் பலதரப்பட்ட புத்தகங்களுமாக 180 இற்கும் மேட்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார் என்றால் யாரும் நம்வே மாட்டார்கள். இதில் சில பாடப்புத்தகங்களும், பரீட்சை வழிகாட்டிகளும் இருக்கலாம். ஆனால் மொத்தமாக இவற்றை எழுத அவருக்கு நேரம் வேண்டும், காலம் வேண்டும், பொருளாதாரப் பலம் வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக தனக்கென ஒரு அறிவுத் திறனும், சந்தை வாய்ப்பும் இருக்க வேண்டும். வேறு எது இருந்தாலும் தனக்கென ஒரு எழுத்தாற்றலுடன் அறிவு அறிவை ஏந்திய ஆற்றலும் சந்தை வாய்ப்பும் இல்லை என்றால் எவரும் புத்தகம் வெளியிட மாட்டார்கள். அது நடவாத காரியம்.
ஆனால் இத்தனை சவால்களையும் தாண்டி ஒரு தனி மனிதனாக தனது மனைவி மசீதா புன்யாமீனின் உதவியோடு இத்தனையையும் சாதித்தார் என்றால் அது சிலரால் நம்முடியாததுதான்.
இருப்பினும் பொதுவாக கோழி ஒரே ஒரு முட்டையை விட்டு விட்டு வீட்டுக் கூறை மீதேறி பக்கத்து விடுகளுக்கெல்லாம் கேட்கும் விதத்தில் கொக்கரித்துக் காட்டும். ஆனால் ஆயிரம்முட்டைகளை இட் ஆமையோ அமைதியாக இருந்து விடும். புன்யாமீனும் இதேவகையில் 180 புத்தகங்களை எழுதி வெளியிட்டு அமைதியாக இருந்தவர்.
அவரை கலையுலக மறக்க முடியாது. அந்த அடிப்படையில் மலையக கலல கலாசார சங்கம் அவருக்கு ஒரு சில நிமிடமாவது நினைவு அங்சலியை செலுத்தியது வரவேற்கத்தக்கது. இருப்பினும் வருடந்தோரும் பலருக்கு விழா எடுக்கும் மலையக கலைகலாசார சங்கம், இரத்தின தீபம் அமைப்பு, மலையக கல்வி மேம்பாட்டுச் சங்கம் என்பன இணைந்து புன்யாமீனுக்கும் ஒரு நினைவுக் கூட்டம் நடத் வேண்டும் என்பதே பலரது அவா.
மலையகத்தின் கல்வியை மேலோக்கச் செய்த உடதலவின்னை ஈன்றெடுத்த பெருமகன் மறைந்த எனது மாணவனும், நண்பனுமான புன்யாமீனின் ஆத்மா சாந்தியடைவதுடன் அவருக்கு இறைவன் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற சுவனத்தை வழங்குவானாக ஆமீன்.
Post a Comment