Header Ads



கல்விநிலை பின்தங்கி காணப்படுவதற்கு, அரசியல் தலையீடே காரணம் - இம்ரான் மஹரூப்

எமது மாவட்ட கல்விநிலை மிகவும் பின்தங்கி காணப்படுவதற்கு அரசியல் தலையீடே பிரதான காரணம்.இது எமது கல்வியை அழித்தொழிக்கும் புற்றுநோய் என தெரிவித்தார்  திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப்.பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியினால் விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ள கிண்ணியா அலிகார் வித்தியாலயத்தின் நீண்டநாள் குறைபாடாக காணப்பட்ட இரண்டுமாடி கட்டடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் இன்று செவ்வாய்க்கிழமை காலை கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்
எனது அரசியல் வாழ்கையின் ஆரம்ப காலமான மாகாணசபை உறுப்பினராக இருந்தபோது வழங்கிய வாக்குறுதியை இன்று நிறைவேற்றுவதை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன் அன்று நான் எதிர்கட்சி மாகாணசபை உறுப்பினராக இருந்தபோது இப்பாடசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்துகொள்ள இங்கு வந்தபோது பல வகுப்புக்கள் மர நிழல்களிலும் தகர கூடாரங்களிலும் நடத்தப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது அச்சந்தர்ப்பத்தில் அதிபர்இஆசிரியர்கள் என்னிடம் இந்த கட்டடத்தின் தேவை குறித்து விவரித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ் இன்று இப்பாடசாலையின் முக்கிய குறைபாடு நிவர்த்தி செய்யும் தருவாயிளுள்ளது
இவ்வாறான பௌதீக குறைபாடுகள் நிறைந்த பல பாடசாலைகள் மாவட்டம் முழுதும் காணப்படுகின்றன அவை அனைத்தும் விரைவில் நிவர்த்திசெய்யப்பட்டு எமது மாணவர்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுகொடுப்பது எமது மத்தியில் உள்ள பாரிய சவால் .ஆனால் இன்று எமது கல்விநிலையை எடுத்துகொண்டால் நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம் எவ்வாறெனில் கடைசியாக வெளியிடப்பட்ட புலமைபரீட்சை பெறுபேறுகளின்படி எமது கிண்ணியா வலையம் 98 வது இடத்தில் உள்ளது மொத்தமாக உள்ள 98 வலயங்களில் நாம் கடைசி இடம்
நாம் எமது பிரதேச கல்வியை முன்னேற்ற வேண்டுமாயின் பௌதீக,ஆளணி,சிறந்த திட்டமிடல் என்பன அவசியமாகும் இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி கல்விநடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்வதற்கான சிறந்த திட்டங்கள் பாடசாலை நிர்வாகத்தால் வகுக்கப்பட வேண்டும்  இவற்றில் ஒன்று இல்லாவிடினும் எமது சமூகம் கல்வியில் வெற்றிகொள்ளமுடியாது துரதிஸ்டவசமாக இம்மூன்றையும் ஒன்று சேர்ப்பது எமது பிரதேச பாடசாலைகளில் முடியாத காரியமொன்றாகவே காணப்படுகின்றது நான் எப்போதும் கூறுவது போன்று கல்வியில் அரசியல் தலையீடு இருக்கின்றவரை எம்மால் ஒருபோதும் முன்னோக்கி பயணிக்க முடியாது அரசியல் தலையீடு என்பது எமது கல்வியை பிடித்த புற்றுநோய்.அதை அழித்தொழித்தால் மாத்திரமே எம்மால் முன்னோக்கி பயணிக்க முடியும்
.
இவையாவும் நடைபெற்றால் கல்வி,விளையாட்டுகளில் எமது மாணவர்கள் தேசிய ரீதியில் சாதிப்பார்கள்.இன்ஷா அல்லாஹ் இதை நடைமுறைப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்துதருவேன் அத்தோடு இன்று பாடசாலை நிர்வா கத்தால் பாடசாலை விளையாட்டு மைதானத்துக்கான விளையாட்டு அரங்கு ஒன்று உட்பட சில பௌதீக வசதிகளை  அமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது இன்ஷாஅல்லாஹ் இவற்றை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வேன்
அத்தோடு இங்கு இரண்டுமாடி கட்டடத்தை நிர்மாணிக்க கிழக்கு மாகாண கல்வியமைச்சர் தண்டாயுதபாணி மாகாண கல்வி பணிப்பாளர் நிசாம் உதவிய மாகாண பிரதிகல்வி பணிப்பாளர் உனைஸ்   ஆகியோருக்கு இச்சந்தர்பத்தில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments

Powered by Blogger.