Header Ads

ஹக்கீமிடமிருந்து றிசாத்திற்கும், அதாவுல்லாக்கும் அழைப்பு, மாநாட்டை புறக்கணிப்பவர்களுக்கு ஆப்பு!

(சுலைமான் றாபி)

அமைச்சர் ரிஷாத் மற்றும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா உள்ளிட்டோர்களும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து  பிரிந்து சென்றவர்களும் இம்மாதம் 19ம் திகதி பாலமுனையில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டிற்கு சமூகமளிக்கலாம் எனவும், அவர்களுக்காக அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தவிர மாநாட்டினை குழப்ப வேண்டும் அல்லது அதனை வெற்றியடையாமல் தடுக்க வேண்டும் எனும் நிலையில் உள்ள முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக கட்சி தீவிர நடவடிக்கைகளை எடுக்கத் தவறாது என மு.கா தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நேற்றைய தினம் (12) ஒலுவிலில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு பற்றிய   ஊடகவியாளர் சந்திப்பின் போதே  போதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் கூறுகையில் :

இலங்கையில் காணப்படும் ஏனைய முஸ்லிம் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் இம்மாநாட்டிற்கு வரலாம். அதற்காக எந்த தடையும் இல்லை. அமைச்சர் ரிஷாத் மற்றும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா உள்ளிட்டோர்களும் தாராளமாக வரலாம் எனக்குறிப்பிட்டார். மேலும் இந்த நிலையில் குறிக்கிட்ட ஊடகவியலாளர் ஒருவர் தொடுத்த கேள்வியில்

தேசிய மாநாட்டில் இவ்வாரானோர்கள் சமூகமளித்தால் முஸ்லிம் கூட்டமைப்பினை ஒருவாக்கலாமே?

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பினை உருவாக்கும் விடயத்தில் கட்சி முடிவெடுக்க வேண்டும். இவ்விடயம் சம்பந்தமாக இதுவரைக்கும் எவ்வித முடிவுகளும் எட்டப்படவில்லை இருந்தாலும் இந்த விடயத்தினை உருவாக்க மாட்டோம் என்று சொல்லவில்லை. காலம் கனியும் போது அதற்கான முடிவுகளும் எட்டப்படும். 

இதுதவிர தேசிய மாநாட்டில் இவ்வாறானதொரு கட்டமைப்புக்களை உருவாக்க முடியாது. ஏனென்றால் அதற்கானதொரு  நிரந்தர கட்டமைப்புக்கள் வேண்டும். மேலும் முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்றவர்கள் முஸ்லிம் காங்கிரசின் கொள்கையினை மாற்ற வேண்டும் என்று யாரும் பிரிந்து செல்லவில்லை. மாறாக அமைச்சுப் பதவிகளைப் பெறவே தனிக்கட்சிகளை ஆரம்பித்து கட்சியை விட்டு பிரிந்து சென்றனர். எனவே இன்னொரு முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்று உருவாகும் போது அதில் எத்தனை அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் என்பதைப் பொறுத்துத்தான் முஸ்லிம் கூட்டமைப்பு உருவாகுவது சாத்தியமாகும். எனவே இந்த விடயத்தில் தூய எண்ணத்துடன் சிந்திக்கும் சக்திகள் மாத்திரமே இதில் புரிந்துணர்வுடன் செயற்படுவர் என்றார்.

5 comments:

  1. தலைவர் ரவூப் ஹகீம் அவர்களே, ரிசாத், அதாவுல்லா, ஹிஸ்புல்லாஹ், பெரிய மஹ்ரூப் ( கிண்ணியா), திடீர் தெளபீக், பாயிஸ் (புத்தளம்), ரஹ்மான் ( காத்தான்குடி), பசீர் சேகு தாவுத் போன்ற ( இன்னும் பலர், எம்பி, மகான சபை, பிரதேச சபை..etc ) உங்களையும் சேர்த்துதான், அமைச்சு பதவிக்கும் தனி சுயநலத்துக்கும் தான் அரசியல் செய்கிறீர்கள். இதில் யாராவது உரிமைக்காக, கொள்கைகைகாக, மக்களுக்காக, நாட்டுக்காக இவைகளை சரியான அறிவுடன், புரிதலுடன் ( நிறைய பேருக்கு இவை என்ன வென்றே தெரியாது,சில தெரிந்தவர்கள் படு பயங்கரமான எம கண்டர்கள்) தியாகத்துடன் செயற்படுபவர்கள் யாருமில்லை. முதலில் எந்த பதவியும் இல்லாமல் ( எதிகட்சியில் இருந்து கொண்டு) கொள்கை ரீதியில், உரிமை போராட்ட ரீதியில் மக்களை ஒருங்கிணைக்கும் ஆற்றல் உள்ள ஒருவர் நமது சமூகத்தில் வெற்றிடமாகவே உள்ளது.

    ஆக தற்போதைக்கு உள்ள மிகப்பெரும் பலம் இந்த முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி தான். இந்த பலத்தை சிதைக்க முற்பட்ட மாபெரும் துரோகிகள் தான் இந்த கட்சியை விட்டுச் சென்ற சுயநல கும்பல்கள். இதில் இந்த அதாவுல்லா என்பவர் ஒரு செத்த பாம்பு. ரிசாத் ( தனது பணத்தின் மூலம் நாடு பூராகவும் இந்த காட்சியை அழித்துக் கொண்டிருப்பவர்) என்பவர் ஒரு நச்சு பாம்பு விட்டு வைக்க முடியாதவர். சமூக ஒற்றுமையின் நிமிர்த்தம் இவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்து (இவர்களுடன் கூட்டு என்பது இந்த கட்சி தற்கொலை செய்வதற்கு சமன் ) செயட்படட்டும், அவரவர் மக்கள் செல்வாக்குக்கும் திறமைக்கும் ஏற்ப பதவிகளை கட்சி தீர்மானிக்க வேண்டும். ( நீங்கள் அல்ல; நல்ல திறமையுள்ள நியாயமானவர்கள் உங்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள்) இந்த முடிவுதான் தலைவர் அஷ்ரப் காலத்திலும் எடுக்கப் பட்டது ( சேகு இஸ்ஸதீன், ஜவாத், ஹிஸ்புல்லா..etc ). இந்த இடத்தில் உங்களது பலவீனத்தாலும், பிழையான வழிகாட்டலினாலும், மூத்த விசுவாசமான ஒரு போராளி ஹசன் அலி அவர்கள், உங்களால் புரந்தள்ளபட்டுள்ளார் என்பது தான் எமது கணிப்பாகும். அவர் சரியாக மதிக்கப்பட்டு ( எம்பி பதவியை கொடுக்கலாம்; ) அரவணைத்து செல்லப்படல் வேண்டும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதே நேரம் ஹசன் அலி அவர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறோம், இந்த கட்சியையும், கட்சிக்குள் தலைமைத்துவத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கும், கட்சி போராளிகளை வழிநடத்துவதட்கும் போராளிகளுடன் போராளியாக தொடர்ந்து இந்த கட்சியில் நீங்கள் பயணிக்க வேண்டும் ( இது தான் உங்களை புறகணித்த தலைமைக்கு கொடுக்கும் சரியான பதிலாகும், நிட்சயம் உண்மையான அனைத்து போராளிகளும் உங்களுடன் இருப்பார்கள்) என்பது எமது பணிவான வேண்டுகோள் ஆகும்.

    ReplyDelete
  2. தலைவர் ரவூப் ஹகீம் அவர்களே, ரிசாத், அதாவுல்லா, ஹிஸ்புல்லாஹ், பெரிய மஹ்ரூப் ( கிண்ணியா), திடீர் தெளபீக், பாயிஸ் (புத்தளம்), ரஹ்மான் ( காத்தான்குடி), பசீர் சேகு தாவுத் போன்ற ( இன்னும் பலர், எம்பி, மகான சபை, பிரதேச சபை..etc ) உங்களையும் சேர்த்துதான், அமைச்சு பதவிக்கும் தனி சுயநலத்துக்கும் தான் அரசியல் செய்கிறீர்கள். இதில் யாராவது உரிமைக்காக, கொள்கைகைகாக, மக்களுக்காக, நாட்டுக்காக இவைகளை சரியான அறிவுடன், புரிதலுடன் ( நிறைய பேருக்கு இவை என்ன வென்றே தெரியாது,சில தெரிந்தவர்கள் படு பயங்கரமான எம கண்டர்கள்) தியாகத்துடன் செயற்படுபவர்கள் யாருமில்லை. முதலில் எந்த பதவியும் இல்லாமல் ( எதிகட்சியில் இருந்து கொண்டு) கொள்கை ரீதியில், உரிமை போராட்ட ரீதியில் மக்களை ஒருங்கிணைக்கும் ஆற்றல் உள்ள ஒருவர் நமது சமூகத்தில் வெற்றிடமாகவே உள்ளது.

    ஆக தற்போதைக்கு உள்ள மிகப்பெரும் பலம் இந்த முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி தான். இந்த பலத்தை சிதைக்க முற்பட்ட மாபெரும் துரோகிகள் தான் இந்த கட்சியை விட்டுச் சென்ற சுயநல கும்பல்கள். இதில் இந்த அதாவுல்லா என்பவர் ஒரு செத்த பாம்பு. ரிசாத் ( தனது பணத்தின் மூலம் நாடு பூராகவும் இந்த காட்சியை அழித்துக் கொண்டிருப்பவர்) என்பவர் ஒரு நச்சு பாம்பு விட்டு வைக்க முடியாதவர். சமூக ஒற்றுமையின் நிமிர்த்தம் இவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்து (இவர்களுடன் கூட்டு என்பது இந்த கட்சி தற்கொலை செய்வதற்கு சமன் ) செயட்படட்டும், அவரவர் மக்கள் செல்வாக்குக்கும் திறமைக்கும் ஏற்ப பதவிகளை கட்சி தீர்மானிக்க வேண்டும். ( நீங்கள் அல்ல; நல்ல திறமையுள்ள நியாயமானவர்கள் உங்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள்) இந்த முடிவுதான் தலைவர் அஷ்ரப் காலத்திலும் எடுக்கப் பட்டது ( சேகு இஸ்ஸதீன், ஜவாத், ஹிஸ்புல்லா..etc ). இந்த இடத்தில் உங்களது பலவீனத்தாலும், பிழையான வழிகாட்டலினாலும், மூத்த விசுவாசமான ஒரு போராளி ஹசன் அலி அவர்கள், உங்களால் புரந்தள்ளபட்டுள்ளார் என்பது தான் எமது கணிப்பாகும். அவர் சரியாக மதிக்கப்பட்டு ( எம்பி பதவியை கொடுக்கலாம்; ) அரவணைத்து செல்லப்படல் வேண்டும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதே நேரம் ஹசன் அலி அவர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறோம், இந்த கட்சியையும், கட்சிக்குள் தலைமைத்துவத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கும், கட்சி போராளிகளை வழிநடத்துவதட்கும் போராளிகளுடன் போராளியாக தொடர்ந்து இந்த கட்சியில் நீங்கள் பயணிக்க வேண்டும் ( இது தான் உங்களை புறகணித்த தலைமைக்கு கொடுக்கும் சரியான பதிலாகும், நிட்சயம் உண்மையான அனைத்து போராளிகளும் உங்களுடன் இருப்பார்கள்) என்பது எமது பணிவான வேண்டுகோள் ஆகும்.

    ReplyDelete
  3. As a Muslim our grate strength is live as Muslim not member in political party. This what we need to teach our future genaration.

    ReplyDelete
  4. முஸ்லிம் காங்கிரசை கட்டியெழுப்ப கூடியவர்கள் வேறு ஒருவரும் முஸ்லிம் காங்கிரசில் கிடையாது என்ற மாயையை தலைவர் இந்நாட்டில் ஏற்படுத்தி வைத்துள்ளார் .அவ்வாறில்லை நிறைய தலைவர்கள் ஆளுமை உள்ளவர்கள் முஸ்லிம் காங்கிரசில் உள்ளனர் .அவர்களில் ஏனைய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை கவரக்கூடிய ஒருவரை தலைவராக கொண்டுவரும்போது அனைத்து முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி என்பது மிகவும் இலகுவான காரியமாக காணப்படும் .

    ReplyDelete
  5. என்னடா இது புதுக்கதையா இருக்கு....
    இவ்வளவு காலமும் தலைவர் ஹகீம் ஏன் நிந்தவூருக்கு இரண்டு MP களை கொடுக்கவேண்டும்?
    பெரும் பதவியான பொதுச்செயலாளர் பதவியிலிருந்துகொண்டு ஹசனலிக்கு வெண்டுவர ஏலாதா? முதுகெலும்பு இல்லையா?
    தலைவர் ஹக்கீமின் அந்தரங்க பைல் ஹசனலியிடம் இருக்கிறது, அதனால் ஆயுள் முழுவதும் ஹசனலிக்கு தலைவர் தே. பட்டியல் கொடுத்தே ஆகுவார்,
    என்றெல்லாம் ஒப்பாரி வைத்தவர்கள் எல்லோரும், இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
    ஹசனலி சேர் அவர்கள் தே. பட்டியல் போராளியா, கட்சிப்போராளியா என்பதை குருவி சொல்லிகொடுத்துதான் வெளிக்காட்டவேண்டியதில்லை,
    அவரவரின் சுயரூபம் அவ்வப்போது இறைவனால் வெளிப்படுத்தப்படும். அதுவரைக்கும் மக்கள் மடையர்களாகவே இருப்பார்கள்....
    உண்மையான போராளிகள் பதவிக்காக மட்டும் கட்சியோடிருப்பதில்லை...

    ReplyDelete

Powered by Blogger.