மீண்டும் நாட்டை ஆளுவதற்கு, மகிந்தவுக்கு தகுதியுள்ளதா..? - சஜித் கேள்வி
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாஸ, நுரைச்சோலை என்பது " இருட்டின் உற்பத்தி நிலையமாகும் " என்றும் அர்த்தப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்திருப்பதாவது,
நாட்டை ஆட்சி செய்வதற்கு முடியாமல் இரண்டு வருடங்களுக்கு முன்பதாக தேர்தலை நடத்தி மக்களால் நிராகரிக்கப்பட்டு ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு ஹைட்பார்க்கிற்கு வந்து மீண்டும் ஆட்சி செய்வதற்கு தன்னிடம் நாட்டை வழங்குமாறு கேட்கின்றார். அவருக்கு நாட்டை ஆள்வதற்கு தகுதி உள்ளதா? நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டிருக்காவிடின் மின்சார நெருக்கடி மேலும் அதிகரித்திருக்கும் என்கிறார். இந்த மின் உற்பத்தி நிலையம் இவரது ஆட்சிக் காலத்திலேயே நிர்மாணிக்கப்பட்டது. 50 தடவைகளுக்கு மேல் இது பழுதடைந்தது. அதிக வட்டிக்கு கடன் வாங்கி "கமிஷன்" பெற்றுக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டதுதான் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமாகும்.
இவ்வாறானதொரு வரலாறு கொண்ட மஹிந்ததான் மீண்டும் ஆட்சியை கையளிக்குமாறு கேட்கின்றார். அவரிடம் கொடுத்தால் நன்றாகத்தான் இருக்கும். நுரைச்சோலை இன்று இருட்டின் உற்பத்தி நிலையமாக மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்
Post a Comment