மின்சாரத் தடை, ஒரு நாசவேலை..? மின்சார சபைத் தலைவர் இராஜினாமா..??
நாட்டில் அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதற்கு நாசவேலைகளின் செயற்பாடுகளாகவும் இருக்கலாம் என மீள் சுழற்சி சக்தி மற்றும் மின்வலு பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்,
மின்சாரம் தடைப்பட்டது தொடர்பில் வெளிப்படையாக தெரியும் காரணிகள் மிகவும் அசாதாரணமானவை. இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவும் தற்போதும் இவ்வாறு மின்சாரம் தடைபட்டிருந்தமை, நாச வேலையாக இருக்குமோ என சந்தேகிக்க போதியளவு அவகாசத்தை தருவதாகத் குறிப்பிட்டுள்ள அவர்,
தொழில்நுட்ப கோளாறுகளுக்கு அப்பாலான காரணிகளின் அடிப்படையில் மின்சாரம் தடைப்பட்டதா என்பதனை தெரிந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினினும் விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளின் அடிப்படையிலன்றி மின்சாரத் தடைக்கான காரணங்களை கண்டறிய முடியாது எனவும் அதன் பின்னரே, மின்சாரத் தடை ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் சட்டிக்காட்டியுள்ளார்.
மின்சார சபைத் தலைவர் முடிவு!
இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜயபால தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கடந்த ஆறு மாத காலப்பகுதிகளுக்குள் மூன்று தடவைகள் நாடுபூராகவும் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டிருப்பதால் அதற்கான பொறுப்பை ஏற்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.
தடைப்பட்டிருந்த மின்சாரம் வழமைக்குத் திரும்பியவுடன் குறித்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் தனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
மின்சாரத்துக்குப் பொறுப்பான அமைச்சரும்,பிரதிஅமைச்சரும் உடனடியாக தமது பதவிகளிலிருந்து வெளியேறிவிட்டு காரணம் கற்பிக்க வேண்டும். மக்களை ஏமாற்றி கருத்து வெளியிட்டுக் கொண்டிருக்கும் ராஜபக்ஸ ஆட்சி இப்போது இல்லை. நல்லாட்சி என்பது தவறை தாம் ஒத்துக் கொண்டு மோசடி அல்லது வேறுகாரணங்களுக்காக மின்சாரத்தைத்துண்டித்து மக்களுக்கு அநியாயமாக தொந்தரவும் நஷ்டத்தையும் ஏற்படுத்தும் அதிகாரிகளும் அமைச்சர்களும் எமக்கு தேவையில்லை என்பதுதான் மக்களின் உறுதியான கருத்து என்பதைத் தெளிவாகக் கூறிவைக்க விரும்புகின்றோம்.
ReplyDelete