விளையாட்டுப் போட்டிகளை நடத்தாதீர்கள் - கல்வியமைச்சு
பாடசாலைகளுக்கிடையிலான வலயமட்ட விளையாட்டு போட்டிகள் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் நடத்துவதற்கு கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறினார்.
காலநிலை அவதான திணைக்களம் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கமைய கல்வியமைச்சினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இன்று -23- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வியமைச்சர் கூறினார்.
காலநிலை அவதான நிலையம் வழங்கியுள்ள தகவலின் படி வெப்பநிலை 38 பாகை செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதாகவும், மருத்துவ நிபுணர்கள் வழங்கியுள்ள தகவல்படி அதிக உஷ்னம் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார ரீதியான பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.
இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு, பாடசாலைகளின் வலயமட்ட விளையாட்டு போட்டிகளை மே மாத ஆரம்பத்தில் நடத்த முடியுமென்றால் அது மிகவும் நல்லதென்றும், மாகாண மட்ட போட்டிகளை ஜூலை மாதமும், தேசிய போட்டிகளை செப்டம்பர் மாதமும் நடத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இது சம்பந்தமான சுற்றரிக்கைகளை கல்வியமைச்சின் செயலாளர் ஊடாக அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்களுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேலும் கூறினார்.
Post a Comment